Photo of Paniyaram by Sathya Kumar at BetterButter
415
3
0.0(0)
0

பணியாரம்

Mar-29-2018
Sathya Kumar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பணியாரம் செய்முறை பற்றி

உடனடி ரவா பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 300கி
  2. தயிர் 200மிலி
  3. கேரட் 1/4 கப்
  4. பீன்ஸ் 1/4 கப்
  5. கோஸ் 1/4 கப்
  6. பட்டாணி 1/4 கப்
  7. பெரிய வெங்காயம் 1
  8. இஞ்சி 1 இன்ச்
  9. நீளமான பச்சை மிளகாய் 2
  10. கொத்தமல்லி தழை
  11. சீரகம் 1/4 டீஸ்பூன்
  12. கடலைப்பருப்பு 1/4 டீஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு 1/4 டீஸ்பூன்
  14. உப்பு
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. 15 நிமிடம் முன்பு ரவையில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  2. கொடுக்கப்பட்ட காய்கறிகள் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இஞ்சி வெங்காயம் பச்சைமிளகாய் காய்கறிகள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி 1 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்
  5. காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் இறக்கி வைத்து ரவை கலவையில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி நன்கு கலந்து கொள்ளவும்
  6. அடுப்பில் பணியார சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை பணியாரம் போல் வார்த்து இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்
  7. பீட்ரூட் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்