மசாலா ரைஸ் | Masala Rice in Tamil

எழுதியவர் rachna patwa  |  5th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Masala Rice by rachna patwa at BetterButter
மசாலா ரைஸ்rachna patwa
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

829

0

மசாலா ரைஸ் recipe

மசாலா ரைஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala Rice in Tamil )

  • 2 தேக்கரண்டி துருவிய வெண்ணெய் (விருப்பம் சார்ந்தது)
  • 3 தேக்கரண்டி முளை (விருப்பம் சார்ந்தது)
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 2 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 2 தேக்கரண்டி கடுகு
  • கொஞ்சம் கறிவேப்பிலை
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 3ல் இருந்து 4 பூண்டு பற்கள் நறுக்கியது
  • 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • சுவைக்கேற்ற உப்பு
  • புதிய கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
  • 2ல் இருந்து 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 சிறிய குடமிளகாய் பொடியாக நறுக்கியது
  • 2 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1 பெரி யவெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 கிண்ணம் சாதம்

மசாலா ரைஸ் செய்வது எப்படி | How to make Masala Rice in Tamil

  1. ஒரு கடாயை எடுத்து எண்ணெயைச் சூடுபடுத்துக.
  2. எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை, கடுகு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும்.
  3. கடுகு பொரிய ஆரம்பித்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கிக்கொள்ளவும்.
  4. அதன்பின்னர் குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  5. அதன்பின்னர் தக்காளி, முளை, இஞ்சிப்பூண்டு விழுதும் அனைத்து மசாலாக்களையும், கரம் மசாலாவைத் தவிர, சேர்த்து கலக்கிக்கொள்ளவும். கடாயை 1 நிமிடம் மூடி வைக்கவும். அப்போதுதான் தக்காளியும் முளையும் நன்றாக வேகும்.
  6. இப்போது சாதத்தைச் சேர்த்து நன்றாகப் பிரித்துவிடவும். அப்போதுதான் சாதத்தில் மசாலா நன்றாகச் சேரும். இப்போது, கரம் மசாலா சேர்த்து கடாயை ஒரு அரை நிமிடம் மூடிவைக்கவும்.
  7. பச்சை கொத்துமல்லி மற்றும் வெண்ணெய் துருவலால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

அதிகமாக வெண்ணெய் சேர்த்தால் மிக ருசியாக இருக்கும். பழுப்பரிசியைக்கூட இந்த உணவுக்குப் பயன்படுத்தலாம்.

Reviews for Masala Rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.