Photo of Masala Rice by rachna patwa at BetterButter
10504
115
4.8(0)
0

மசாலா ரைஸ்

Apr-05-2016
rachna patwa
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கிண்ணம் சாதம்
  2. 1 பெரி யவெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 2 தக்காளி பொடியாக நறுக்கியது
  4. 1 சிறிய குடமிளகாய் பொடியாக நறுக்கியது
  5. 2ல் இருந்து 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  6. புதிய கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  9. 3ல் இருந்து 4 பூண்டு பற்கள் நறுக்கியது
  10. 2 தேக்கரண்டி எண்ணெய்
  11. கொஞ்சம் கறிவேப்பிலை
  12. 2 தேக்கரண்டி கடுகு
  13. 2 தேக்கரண்டி மல்லித்தூள்
  14. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  15. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  16. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  17. 3 தேக்கரண்டி முளை (விருப்பம் சார்ந்தது)
  18. 2 தேக்கரண்டி துருவிய வெண்ணெய் (விருப்பம் சார்ந்தது)

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை எடுத்து எண்ணெயைச் சூடுபடுத்துக.
  2. எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை, கடுகு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும்.
  3. கடுகு பொரிய ஆரம்பித்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கிக்கொள்ளவும்.
  4. அதன்பின்னர் குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  5. அதன்பின்னர் தக்காளி, முளை, இஞ்சிப்பூண்டு விழுதும் அனைத்து மசாலாக்களையும், கரம் மசாலாவைத் தவிர, சேர்த்து கலக்கிக்கொள்ளவும். கடாயை 1 நிமிடம் மூடி வைக்கவும். அப்போதுதான் தக்காளியும் முளையும் நன்றாக வேகும்.
  6. இப்போது சாதத்தைச் சேர்த்து நன்றாகப் பிரித்துவிடவும். அப்போதுதான் சாதத்தில் மசாலா நன்றாகச் சேரும். இப்போது, கரம் மசாலா சேர்த்து கடாயை ஒரு அரை நிமிடம் மூடிவைக்கவும்.
  7. பச்சை கொத்துமல்லி மற்றும் வெண்ணெய் துருவலால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்