வீடு / சமையல் குறிப்பு / சக்கரைவள்ளிகிழங்கு சப்பாத்தி

Photo of Sweet Potato Chapathi by Sowmya Sundar at BetterButter
452
4
0.0(0)
0

சக்கரைவள்ளிகிழங்கு சப்பாத்தி

Mar-29-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சக்கரைவள்ளிகிழங்கு சப்பாத்தி செய்முறை பற்றி

சக்கரைவள்ளிகிழங்கு மற்றும் கோதுமை மாவு சேர்த்து செய்த சாப்டான சுவையான சப்பாத்தி.நேரம் ஆனாலும் மிருதுவாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சக்கரைவள்ளிகிழங்கு -2
  2. கோதுமை மாவு-1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  5. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  6. மல்லி தூள்-1/2 டீஸ்பூன்
  7. சீரக தூள்-1/4 டீஸ்பூன்
  8. ஆம்சூர் பொடி-1/2 டீஸ்பூன்
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. எண்ணெய் -சப்பாத்தி செய்ய சிறிதளவு

வழிமுறைகள்

  1. சக்கரைவள்ளிகிழங்கை குக்கரில் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் வெந்த சக்கரைவள்ளிகிழங்கு மற்றும் கொடுத்துள்ள எல்லா பொருட்களையும்(எண்ணெய் தவிர) சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவை பட்டால் மட்டுமே சிறிது சேர்த்து கொள்ளலாம்.
  3. பின்னர் உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து கொள்ளவும்.
  4. பின்னர் சூடான தோசை கல்லில் நன்றாக இரு புறமும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்