வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் வடை

Photo of Cabbage vadai by Priya Tharshini at BetterButter
319
3
0.0(0)
0

முட்டைகோஸ் வடை

Apr-01-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் வடை செய்முறை பற்றி

சத்தாக சுலபமாக செய்யக் கூடிய உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. உளுத்தம் பருப்பு - 1 கப்
  2. முட்டைகோஸ் - 1.5 கப் பொடியாக நறுக்கியது
  3. ப. மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
  4. இஞ்சி - 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
  5. கொத்தமல்லி - சிறிது
  6. கருவேப்பிலை - சிறிது
  7. பெருங்காயம்- சிறிது
  8. உப்பு - தேவைக்கு
  9. தண்ணீர் - தேவைக்கு
  10. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு தண்ணீர் நீக்கி உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து மையாக அரைக்கவும். தண்ணீர் பார்த்து சேர்க்கவும்.
  3. அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றி முட்டைகோஸ்,ப.மிளகாய்,இஞ்சி,கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்க்கவும்.
  4. நன்கு கலந்து கொள்ளவும். கையை தண்ணீர் நினைத்து சிறு மாவை உருண்டையாக எடுக்கவும்.
  5. கட்டை விரல் கொண்டு நடுவில் ஓட்டை போடவும்.
  6. கடாயில் எண்ணெய் சூடாக்கி ஓட்டை போட்ட மாவை எண்ணெய்க்குள் சேர்க்கவும்.
  7. இரண்டு பக்கமும் வேகும் வரை திரிப்பி போடவும். ஓசை அடங்கியதும் வடையை எடுக்கவும்.
  8. முட்டைகோஸ் வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்