வீடு / சமையல் குறிப்பு / வரகு டம்ளர் இட்லி

Photo of Kodomillet Tumbler Idli by pavumidha arif at BetterButter
825
9
0.0(0)
0

வரகு டம்ளர் இட்லி

Apr-01-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகு டம்ளர் இட்லி செய்முறை பற்றி

சிறுதானிய உணவு.மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு.சாம்பார் உடன் சாப்பிட ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகு அரிசி 2 கப்
  2. உளுத்தம்பருப்பு 1 கப்
  3. சீரகம் 1 டீஸ்பூன்
  4. மிளகு 2 டீஸ்பூன்
  5. நெய் 3 டீஸ்பூன்
  6. கருவேப்பிலை சிறிது
  7. பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
  8. வெந்தயம் 1/4 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வரகு அரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அதேபோல் உளுந்து பருப்பு 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. பின்னர் இதனை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து சேர்த்து கொள்ளவும்
  4. இப்பொழுது இந்த மாவில் சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 2-3 மணி நேரம் மூடி வைக்கவும்.
  5. பிறகு கடாயில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  6. இதனை மாவில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
  7. சிறு டம்ளர் எடுத்து அதில் லேசாக தேங்காய் எண்ணெய் தடவி மாவினை இதில் ஊற்றவும்.
  8. பின்னர் இட்லி பாத்திரத்தில் டம்ளரை வைத்து 20 நிமிடம் ஆவியில் வேக விடவும்.
  9. இப்பொழுது அடுப்பை அணைத்து 5-10 நிமிடம் கழித்து டம்ளரை வெளியே எடுக்கவும்.
  10. சுவையான வரகு அரிசி டம்ளர் இட்லி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்