Photo of Rava dosai by Priya Tharshini at BetterButter
917
4
0.0(0)
0

ரவா தோசை

Apr-02-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவா தோசை செய்முறை பற்றி

திடீர் என மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தோசை வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை - 1/2 கப்
  2. அரிசி மாவு - 1/3 கப்
  3. மைதா - 1/4 கப்
  4. தண்ணீர் - 2.5 கப்
  5. உப்பு - தேவைக்கு
  6. பெருங்காயம்- 1 தேக்கரண்டி
  7. வெங்காயம்- 1/4 கப் பொடியாக நறுக்கியது
  8. ப.மிளகாய்- 1 பொடியாக நறுக்கியது
  9. இஞ்சி - சிறிது பொடியாக நறுக்கியது
  10. கருவேப்பிலை - சிறிது பொடியாக நறுக்கியது
  11. மிளகு - 1 தேக்கரண்டி
  12. சீரகம் - 1 தேக்கரண்டி
  13. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா,அரிசி மாவு மற்றும் ரவை சேர்த்து கலக்கவும்.
  2. அதில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மிளகு, சீரகம், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.
  3. தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும். தோசை ஊற்றும் போது ஒவ்வொரு முறையும் நன்கு கலக்கவும்.
  4. தோசை கல் சூடாக்கி மாவை கரண்டியால் சுற்றி ஊற்றவும். பிறகு நடுவில் ஊற்றவும்.
  5. சுற்றி எண்ணெய் ஊற்றி பொன் நிறம் ஆகும் வரை வேக விடவும்.
  6. இரண்டு பக்கமும் வேகும் வரை தோசை திரிப்பி எடுக்கவும். ரவா தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்