வெள்ளரி் ரவா தோசை | Cucumber Rava Dosai in Tamil

எழுதியவர் Sowmya Sundar  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Cucumber Rava Dosai recipe in Tamil,வெள்ளரி் ரவா தோசை, Sowmya Sundar
வெள்ளரி் ரவா தோசைSowmya Sundar
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

6

0

வெள்ளரி் ரவா தோசை recipe

வெள்ளரி் ரவா தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Cucumber Rava Dosai in Tamil )

 • வெள்ளரிக்காய் -1 பெரியது
 • ரவை -1 கப்
 • அரிசி மாவு-1 கப்
 • தயிர்- 3/4 கப்
 • பச்சை மிளகாய்-2
 • மிளகு -1 டீஸ்பூன்
 • சீரகம்-1 டீஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு
 • மல்லி தழை சிறிது
 • எண்ணெய் -தோசைக்கு தேவையான அளவு

வெள்ளரி் ரவா தோசை செய்வது எப்படி | How to make Cucumber Rava Dosai in Tamil

 1. வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து வெள்ளரிக்காயை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
 2. பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு ரவை,அரிசி மாவு மற்றும் உப்பு ,சீரகம் ,மிளகு ,மல்லி தழை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்
 3. ஒரு 15 நிமிடம் வரை மாவை ஊற வைக்கவும்
 4. தோசை கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் மெலிதாக வார்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
 5. சூடாக பரிமாறவும்

எனது டிப்:

வெல்லத்துடன் பரிமாறினால் உப்பு புளிப்பு காரம் இனிப்பு என அமர்க்களமான சுவையுடன் இருக்கும்.

Reviews for Cucumber Rava Dosai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.