முட்டை கொத்து பரோட்டா | Egg kothu parata in Tamil

எழுதியவர் Bena Aafra  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Egg kothu parata recipe in Tamil,முட்டை கொத்து பரோட்டா, Bena Aafra
முட்டை கொத்து பரோட்டாBena Aafra
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    2

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

16

0

About Egg kothu parata Recipe in Tamil

முட்டை கொத்து பரோட்டா recipe

முட்டை கொத்து பரோட்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg kothu parata in Tamil )

  • முட்டை-2
  • பரோட்டா -4
  • வெங்காயம் -2 (பொடியாக நறுக்கியது )
  • பச்சை மிளகாய் -3
  • கறிவேப்பிலை -சிறிதளவு
  • உப்பு
  • எண்ணெய்
  • தக்காளி -1 (பொடியாக நறுக்கியது )
  • கொத்தமல்லித்தழை
  • பரோட்டா குழம்பு
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • மிளகு தூள்

முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி | How to make Egg kothu parata in Tamil

  1. பரோட்டாவை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
  5. நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
  6. சின்ன சின்னதாக நறுக்கி வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து கிளறவும்.
  7. பிறகு பரோட்டா சால்னாவை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
  8. கொத்தமல்லி இழை தூவி இறக்கவும்.
  9. சுவையான முட்டை கொத்து பரோட்டா ரெடி. ...
  10. சூடாக பரிமாறவும்.

Reviews for Egg kothu parata in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.