வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி அடை

Photo of Maravalli adai by Nazeema Banu at BetterButter
330
2
0.0(0)
0

மரவள்ளி அடை

Apr-02-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
26 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி அடை செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மரவள்ளிக் கிழங்கு 1/2 கி
  2. சர்க்கரை (அ) கருப்பட்டி முக்கால் கப் ..
  3. தேங்காய் துருவல் 1/2 கப்
  4. ஏலக்காய் 4 இடித்தது
  5. முட்டை 2
  6. மைதா (அ)கோதுமை மாவு 50கிராம்
  7. நெய் (அ)எண்ணெய் தேவையான அளவு
  8. சமைக்கும் முறை... மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி கழுவி அப்படியே பச்சையாக துருவிக் கொள்ளவும்.. இதனுடன் அனைத்து பொருள்களையும் கலந்து கொள்ளவும்.. மாவூக் கலவை அடை தட்டும் பதத்தில் இருக்க வேண்டும்... ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்க்கலாம்...தோசைக்கல்லில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி மாவை கல்லில் பரத்தி மிதமான தீயில் வேக விட்டு திருப்பிப் போட்டு அதே போல வேக விட்டு எடுத்து துண்டுகள் போடவும்.. இது சூடாகவும் அல்லது ஆறினாலும் சுவையாக இருக்கும்.. இரண்டு நாள் வரை கெடாது.. குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய ஆரோக்கியமான தின்பண்டம் இது..

வழிமுறைகள்

  1. மரவள்ளிக்கிழங்கை கழுவி தோல் சீவி துருவிக்கொள்ளவும்
  2. அந்த துருவலுடன் முட்டை கோ.மாவு கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்க்கவும்
  3. அதில் ஏலக்காய் பொடி சிறிது சேர்க்கவும்
  4. எல்லாவற்றையும் ஒன்றாக அடை மாவு பதத்தில் கலக்கவும்
  5. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி கனமான அடைகளாக ஊற்றவும்
  6. இரண்டு புறமும் பிரட்டிப் போட்டு நன்கு வெந்ததும் துண்டுகள் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்