ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமா | Javarisi vegitable uppuma in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Javarisi vegitable uppuma recipe in Tamil,ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமா, Krishnasamy Vidya Valli
ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமாKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

9

0

ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமா recipe

ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Javarisi vegitable uppuma in Tamil )

  • ஜவ்வரிசி -1 கப்
  • மிக்ஸடு காய்கறிகள் நறுக்கியது -1 கப்
  • வறுத்த வேர்கடலை (தோல் நீக்கிக்கொள்ளவும்)-2 மேஜைக்கரண்டி
  • உப்பு -3/4 தேக்கரண்டி
  • தாளிக்க
  • எண்ணெய் -2 தேக்கரண்டி
  • கடுகு -1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  • சீரகம் -1/4 தேக்கரண்டி
  • பெருங்காயம் -2 சிட்டிகை
  • பச்ச மிளகாய் -2 அல்லது 3
  • கருவேப்பிலை -2 ஆர்க்கு

ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமா செய்வது எப்படி | How to make Javarisi vegitable uppuma in Tamil

  1. ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு முதல் நாள் இரவில் ஊறவைக்கவும்
  2. தண்ணீரை வடித்து விட்டு வறுத்த வேர்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக திரித்து சேர்த்து கலந்து வைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து காய்கள் சேர்த்து வதக்கவும்
  4. காய்கள் நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் ஜவ்வரிசி வேர்கடலை கலவையை சேர்த்து கிளறவும்
  5. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்

எனது டிப்:

விருப்பப்பட்டால் இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கலாம்

Reviews for Javarisi vegitable uppuma in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.