கிராமத்து குழிப்பண்ணியாரம் | Kulippanniyaaram in Tamil

எழுதியவர் Mughal Kitchen  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Kulippanniyaaram recipe in Tamil,கிராமத்து குழிப்பண்ணியாரம், Mughal Kitchen
கிராமத்து குழிப்பண்ணியாரம்Mughal Kitchen
 • ஆயத்த நேரம்

  3

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

9

0

கிராமத்து குழிப்பண்ணியாரம் recipe

கிராமத்து குழிப்பண்ணியாரம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kulippanniyaaram in Tamil )

 • பச்சைஅரிசி 400 கிராம்
 • உளுந்தம்பருப்பு 100 கிராம்
 • வெந்தயம் 2மேஜைக்கரண்டி
 • வேக வைத்த சாதம் ஒருகப்
 • நல்லெண்ணெய் 100கிராம்
 • தினைஅரிசி 50 கிராம்
 • வெல்லம் அல்லது கருப்பட்டி 400 கிராம்

கிராமத்து குழிப்பண்ணியாரம் செய்வது எப்படி | How to make Kulippanniyaaram in Tamil

 1. அரிசி.உளுந்து.தினை அரிசி.வெந்தயத்தை கழைந்து ஊற வைக்கவும்.
 2. முன்று மணிநேரம் கழித்து கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவை நான்குமணி நேரம் புளிக்க வைக்கவும்.பின் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கொள்ளவும்.
 3. பின் பண்ணியாரமாவில் சிறிது உப்பு சேர்த்து வெல்லபாகையும் சேர்த்து கரைக்கவும்.மாவின் பதம் ரவைதோசை மாவு போல் இருக்க வேண்டும்.
 4. பின் குழிபண்ணியார சட்டியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடானதும் மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.தீயை குறைக்கவும்.குறைந்த தீயில்வைத்து மறுபுறம் திருப்பவும்.ஒரு குச்சியை பணணியரத்தின் உள்விட்டு எடுத்தால் குச்சியில் ஓட்டாமல் இருந்தால் பண்ணியரம் வெந்து விட்டது எடுத்து விடவும்.கிராமத்து குழிபண்ணியாரம் ரெடி.

எனது டிப்:

தினைஅரிசிக்கு பதில் சாமை.வரகு.குதிரைவாலி.சேர்த்தும் குழிப்பண்ணியாரம் செய்யலாம்

Reviews for Kulippanniyaaram in tamil (0)