தயிர் வடை | Curd Vada in Tamil

எழுதியவர் Saivardhini Badrinarayanan  |  3rd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Curd Vada by Saivardhini Badrinarayanan at BetterButter
தயிர் வடைSaivardhini Badrinarayanan
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

0

தயிர் வடை

தயிர் வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Curd Vada in Tamil )

 • உளுந்து 1 கப்
 • கேரட் துருவல் 1 /4 கப்
 • பூந்தி 1/4 கப்
 • பச்சை மிளகாய் 1 நறுக்கியது
 • மிளகு 2 மேஜைக்கரண்டி
 • வெங்காயம் 1 நறுக்கியது
 • எண்ணெய் பொரிப்பதற்கு
 • உப்பு
 • தயிர் 2 கப்
 • இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
 • கருவேப்பிலை
 • கொத்துமல்லி இலை

தயிர் வடை செய்வது எப்படி | How to make Curd Vada in Tamil

 1. முதலில் உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
 2. பின் மிக நன்றாக அரைத்து கொள்ளவும்.
 3. அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு , உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
 4. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெயில் வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்.
 5. பின் ஒரு பாத்திரத்தில் தயிர் ,உப்பு , இஞ்சி துருவல் சேர்த்து நன்கு கலந்த பின் அதில் வடையை சேர்க்கவும்.
 6. பின் பரிமாறும் போது கேரட் துருவல், கொத்துமல்லி இலை , பூந்தி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

Reviews for Curd Vada in tamil (0)