வீடு / சமையல் குறிப்பு / சிந்தி மோர் குழம்பு

Photo of Sindhi Kadhi by Bhavna Kalra at BetterButter
2470
164
5.0(0)
0

சிந்தி மோர் குழம்பு

Jul-31-2015
Bhavna Kalra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சிந்தி
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 2 தக்காளி சாந்தாக்கப்பட்டது
  2. 4 தேக்கரண்டி கடலை மாவு
  3. 1/2 தேக்கரண்டி கடுகு
  4. 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  5. 1/2 தேக்கரண்டி சீரகம்
  6. 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  7. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  8. கலவைக் காய்கறி - நறுக்கிய உருளைக்கிழங்கு, பிரஞ்சு பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காளிபிளவர் (இவற்றில் எதைவேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்)
  9. வெந்நீரில் ஒரு பெரிய புளி உருண்டையை ஊறவைக்கவும்
  10. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  11. 1 தேக்கரண்டி எண்ணெய்
  12. சுவைக்கேற்ற அளவு உப்பு

வழிமுறைகள்

  1. கனமாக அடிப்பாகமுள்ள ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், கடுகு ஆகியவற்றை அவற்றில் சேர்க்கவும்.
  2. வெடிக்க ஆரம்பித்ததும் கடலை மாவைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை சிறு தீயில் வறுக்கவும்
  3. கடலை மாவு பொன்னிறமானதும் சிவப்பு மிளகாய்த தூள், மஞ்சள் தூள், நறுக்கியத் தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் வேகமாக கட்டி சேராமல் கலக்கவும்.
  4. இந்தக் கலவையில் மெதுவாக 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், உப்பு, நறுக்கிய தக்காளி, பிரெஞ்சி பீன்ஸ், முருங்கைக்காய், காளிபிளவர் சேர்த்து மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  6. கிட்டத்தட்ட 10-12 நிமிடங்கள் உருளைக்கிழங்கு ஏறக்குறைய வெந்ததும் வெண்டைக்காயை அப்படியேச் சேர்க்கலாம் அல்லது சற்றே வறுத்தும் சேர்க்கலாம்.
  7. வெண்டைக்காய் வெந்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து குழம்பை சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  8. ஆவிபறக்கும் சாதத்தோடு இதைப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்