வீடு / சமையல் குறிப்பு / பாலக் கீரை சப்பாத்தி

Photo of Spinach chapathi by Priya Tharshini at BetterButter
392
4
0.0(0)
0

பாலக் கீரை சப்பாத்தி

Apr-03-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாலக் கீரை சப்பாத்தி செய்முறை பற்றி

பாலக் கீரை மற்றும் மசாலா சேர்த்து செய்யும் சப்பாத்தி வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு- 2 கப்
  2. பாலக் கீரை - 1 கப்
  3. உப்பு - தேவைக்கு
  4. மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
  5. கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  7. தண்ணீர்- தேவைக்கு
  8. எண்ணெய்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாலக் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. அதில் பொடியாக நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து கலக்கவும்.
  4. தேவைக்கு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். தண்ணீர் பார்த்து சேர்க்கவும்.
  5. பிறகு மாவை சமமான உருண்டையாக பிரிக்கவும்.
  6. ஒவ்வொரு உருண்டையும் கோதுமை மாவை தொட்டு சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  7. தோசை கல் சூடாக்கி சப்பாத்தியை தேவையான எண்ணெய் சேர்த்து போட்டு எடுக்கவும்.
  8. இதேபோல் அனைத்து சப்பாத்தியும் போட்டு எடுக்கவும். கீரை சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்