Photo of Chicken Haleem by Asiya Omar at BetterButter
626
6
0.0(2)
0

Chicken Haleem

Apr-04-2018
Asiya Omar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஊற வைக்க:-
  2. உடைத்த கோதுமை-200 கிராம்
  3. பார்லி -2 மேஜைக்கரண்டி
  4. கடலை பருப்பு- 2 மேஜைக்கரண்டி
  5. மசூர் பருப்பு -2;மேஜைக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  7. பாசிப்பருப்பு -1 மேஜைக்கரண்டி
  8. ( அனைத்தையும் அலசி ஊற வைக்கவும்)
  9. எலும்பில்லாத சிக்கன் -500 கிராம்
  10. இஞ்சி பூண்டு விழுது -1 மேஜைக்கரண்டி
  11. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
  12. மல்லித்தூள்-2 தேக்கரண்டி
  13. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
  14. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  15. சாட் மசாலா - 1 தேக்கரண்டி
  16. கரம் மசாலா -1 தேக்கரண்டி
  17. வெங்காயம் -200 கிராம்
  18. மிக பொடியாக நறுக்கிய இஞ்சி -1-2 மேஜைக்கரண்டி
  19. கீரிய பச்சை மிளகாய் -3
  20. நறுக்கிய எலுமிச்சை 1-2
  21. எண்ணெய் - அரை கப்
  22. நெய் - 2 மேஜைக்கரண்டி
  23. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. உடைத்த கோதுமை,பார்லி,பருப்பு வகைகளை குறைந்தது 3-4 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறியவுடன் எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் அரை கப் எண்ணெய் விட்டு 200 கிராம் நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.பொன்னிறமாக வதங்கியதும் எண்ணெய் வடித்து எடுத்து தனியே பொரித்த வெங்காயத்தை வைக்கவும்.
  3. சிக்கனை சுத்தம் செய்து துண்டாக்கி அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  4. வெங்காயம் பொரித்த எண்ணெய்,அத்துடன் 1 மேஜைக்கரண்டி நெய் சூடு செய்யவும்.ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. சிக்கன் சேர்க்கவும்.அத்துடன் குறிப்பிட்ட மசாலா தூள் வகைகள் ,உப்பு சேர்த்து நன்கு ஒரு சேர பிரட்டவும்.அடுப்பை அணைக்கவும்.
  6. ஊறிய தானிய பருப்பு வகைகளை குக்கரில் சேர்த்து 8 -10 கப் தண்ணீர் வரை சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும்.
  7. அத்துடன் வதக்கிய சிக்கன் சேர்க்கவும்.
  8. மிக சிறிய தீயில் வைக்கவும். மூடி போட்டு 45 நிமிடம் வேகட்டும்.
  9. அடுப்பை அணைக்கவும். எல்லாம் வெந்து கெட்டியாக இருக்கும்.ஆவியடங்கியவுடன் திறந்து மத்தினால் மசித்து விடவும்.
  10. ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவைப்பட்டால் கொதிக்கும் நீர் ஒரு கப் சேர்க்கவும். பதம் பொங்கலை விட குழைவாக கஞ்சி போல் இருக்க வேண்டும்.ஆறினால் கெட்டியாகும்.உப்பு சரி பார்க்கவும்.
  11. ஒரு வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு முந்தி பருப்பு வறுக்கவும்.
  12. குக்கரில் தயாரான ஹலீமை ஒரு செர்விங் பவுலில் எடுக்கவும்.வறுத்த முந்திரி.நெய்யுடன் அலங்கரிக்கவும்.பொன்நிறமாக பொரித்த வெங்காயம் மேலே தூவவும்.
  13. பொடியாக நறுக்கிய இஞ்சி,நறுக்கிய மல்லி புதினா,கீரிய பச்சை மிளகாய்,எலுமிச்சை நறுக்கி அதனுடன் வைத்து அலங்கரிக்கவும்.
  14. தட்டில் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.சுவையான சத்தான ஹலீம் தயார். வெஜ் பிரியர்கள் சிக்கன் பதில் காய்கறிகள் அல்லது சோயா உருண்டைகள் சேர்த்து செய்யலாம்.மட்டன் சேர்த்து செய்தாலும் சுவை செமையாக இருக்கும்.
  15. காலை அல்லது முற்பகல் நேர உணவாகப் பரிமாறலாம்.நல்ல பசி தாங்கக்கூடிய ரிச்சான உணவு.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Apr-08-2018
Ayesha Ziana   Apr-08-2018

Superb!!

Waheetha Azarudeen
Apr-05-2018
Waheetha Azarudeen   Apr-05-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்