Photo of Vendaya Kali/ Fenugreek Seed Kali by Menaga Sathia at BetterButter
372
4
0.0(0)
0

வெந்தய களி

Apr-04-2018
Menaga Sathia
495 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வெந்தய களி செய்முறை பற்றி

வயது வந்த பெண்களுக்கு காலை உணவாக இந்த களியை கொடுப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெந்தயம் -100 கிராம்
  2. புழுங்கலரிசி - 400 கிராம்
  3. முழு வெள்ளை உளுந்து -2 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு - சுவைக்கு
  5. கருப்பட்டி - 200 கிராம்
  6. நல்லெண்ணெய்- 100 மிலி
  7. ஏலக்காய்தூள்- 1/2 டீஸ்பூன்
  8. சுக்குபொடி - 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி,உளுந்து ஒன்றாக கழுவி ஊறவைக்கவும்.வெந்தயத்தை தனியாக ஊறவைக்கவும்.முதல்நாள் இரவோ அல்லது 8 மணிநேரம் ஊறவிடவும்
  2. மறுநாள் வெந்தயத்தை முதலில் கிரைண்டரில் பொங்க பொங்க அரைக்கவும்.
  3. பின் அரிசி உளுந்தை நைசாக அரைக்கவும்.
  4. கருப்பட்டியை பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்,கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கெட்ட்டியான சிரப் போல் வரும்வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
  5. சிரப்பில் ஏலக்காய்தூள்,சுக்குபொடி சேர்த்து கலந்து வைக்கவும்
  6. ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவைக்கு நீர் சேர்த்து அடுப்பில் சிறுதீயில் வைத்து கிளறவும்
  7. கெட்டியில்லாமல் கிளறிகொண்டே இருக்கவும். கெட்டியாகி வரும்போது உப்பு சேர்க்கவும்.
  8. இப்பொழுது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  9. ஒரங்களில் ஒட்டாமல் வரும்போது ,அதாவது ஈரக்கையால் மாவை தொட்டால் ஓட்டகூடாது.அப்போது அடுப்பை அணைக்கவும்
  10. ஒரு கிண்ணத்தில் களியை உருண்டை போல் வைத்து குழி செய்து சிரப்பினை ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்