Photo of Banana leaf ada by Rifana Irfan at BetterButter
406
2
0.0(0)
0

இலை அடை

Apr-05-2018
Rifana Irfan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இலை அடை செய்முறை பற்றி

...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாளையிலை- 1
  2. அரிசி மாவு- 1கப்
  3. பச்சை பயறு- 1கப்
  4. தேங்காய்- 3/4 கப்
  5. வெல்லம்- 200கிராம்
  6. ஏலக்காய்- 3
  7. நெய்- 2மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. தண்ணீர்

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பத்திரத்தில், அரிசி மாவு,உப்பு சேர்த்து அதில் கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  2. மாவு இடியாப்ப மாவு பதத்திற்கு இருத்தல் வேண்டும். அதை சிறு உருண்டைகளாக ஆக்கிக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி கொள்ளவும்.
  4. பயறை 1மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.5 விசில் குக்கரில் வேக வைக்கவும்.
  5. இன்னொரு வாணலியில் நெயை சூடாக்கவும், அதில் வேகவைத்த பயறு, வடிகட்டிய வெல்லம் மற்றும் துறுவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. வாளையிலையை சுத்தம் செய்து அதை துண்டுகளாக வெட்டி,எண்ணெய் தடவி கொள்ளவும்.
  7. இலை மீது மாவு உருண்டையை வைத்து விரல்களால் சிறிது பரத்தவும்.இதன் மீது பயறுக்கலவையை வைக்கவும்.
  8. இலையை மூடவும்.
  9. இதனை ஆவியில் 10-15 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்