வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி வேர்கடலை கொழுக்கட்டை

Photo of Spicy Peanut kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
541
4
0.0(0)
0

ஸ்பைசி வேர்கடலை கொழுக்கட்டை

Apr-06-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி வேர்கடலை கொழுக்கட்டை செய்முறை பற்றி

ஆவியில் வேகவைத்த எண்ணெய் அதிகமில்லாத காலை டிபன்/காலை இடைநேர உணவு இது. ஒருவருக்கு ஐந்து வீதம் மூன்று பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு -1/2 கப்
  2. வறுத்த வேர்கடலை -3 மேஜைக்கரண்டி(தோல் நீக்கிக்கொள்ளவும்)
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. வறுத்து திரிக்க
  5. கடலைப்பருப்பு -1/2 தேக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  7. துவரம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  8. எள் -1/2 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி விதை -1/2 தேக்கரண்டி
  10. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  11. மிளகாய் வத்தல் -2
  12. சீரகம்-1 சிட்டிகை
  13. மிளகு -5
  14. பட்டை -1 சிறிய துண்டு
  15. ஏலக்காய், கிராம்பு -தலா 2
  16. பெருங்காயம் -4 சிட்டிகை
  17. எண்ணெய் -2 டிராப்ஸ்
  18. தாளிக்க
  19. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  20. கடுகு -1/2 தேக்கரண்டி
  21. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  22. கருவேப்பிலை -2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அரிசி மாவை உப்பு கொதிக்கும் வெந்நீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  2. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை வறுத்து திரித்துக்கொள்ளவும்.
  3. வறுத்த வேர்கடலையை (ஒரு தேக்கரண்டி தவிர ) மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. பிசைந்த அரிசி மாவு , கரகரப்பாக திரித்த வேர்கடலை, வறுத்து திரித்தது மற்றும் தனியாக வைத்த வேர்கடலை எல்லாம் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. அதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
  6. ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  7. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்.
  8. தக்காளி சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்