சாம்பார் வடி | Sambhar Vadi in Tamil

எழுதியவர் Pranjali K  |  10th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Sambhar Vadi by Pranjali K at BetterButter
சாம்பார் வடிPranjali K
 • ஆயத்த நேரம்

  40

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

91

0

சாம்பார் வடி recipe

சாம்பார் வடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Sambhar Vadi in Tamil )

 • எண்ணெய்: 3 கப்
 • பொரிப்பதற்கு:
 • வெள்ளை எள்ளு: 1 தேக்கரண்டி
 • ஓமம்: 1 தேக்கரண்டி
 • இஞ்சிப்பூண்டு விழுது: 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய்த் தூள்: 1 தேக்கரண்டி
 • உப்பு: 1 தேக்கரண்டி
 • எண்ணெய்: 1 தேக்கரண்டி
 • அரிசி மாவு: 1/2 கப்
 • மைதா/கோதுமை மாவு: 2 கப்
 • கடலை மாவு: 1 கப்
 • மூடுவதற்கு:
 • எண்ணெய்: 2 தேக்கரண்டி
 • எலுமிச்சை சாறு: 2 தேக்கரணடி
 • சர்க்கரை: 1 தேக்கரண்டி
 • உப்பு: 2 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய்: 1 தேக்கரண்டி
 • சாரா பருப்பு: 1 தேக்கரண்டி
 • பூண்டு பற்கள் (நறுக்கியது): 10
 • வெங்காயம் (சிறிய அளவுத் துண்டுகளாக நறுக்கியது): 1 பெரியது
 • பச்சை மிளகாய் (நறுக்கியது): 10
 • வேர்கடலை: 50 கிராம்
 • பெருஞ்சீரகம்: 1 தேக்கரண்டி
 • கசகச: 1 தேக்கரண்டி
 • முந்திரி பருப்புகள் (நறுக்கியது): 10
 • பொடியாக நறுக்கிய தேங்காய்: 1/2 கப்
 • கொத்துமல்லி இலைகள்: 400 கிராம்
 • பூரணம்:

சாம்பார் வடி செய்வது எப்படி | How to make Sambhar Vadi in Tamil

 1. பூரணம் தயாரிப்பது: ஒரு ஸ்கில்லெட்டில் எண்ணெய் சேர்த்து மிதமானச் சூட்டில் சூடுபடுத்தவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் சேர்க்கவும் கொத்துமல்லி, எலுமிச்சை சாற்றைத் தவிர.
 2. 2-3 நிமிடங்கள் வெங்காயம் வேகும்வரை வதக்கவும்.
 3. அடுப்பை நிறுத்துக. இப்போது எலுமிச்சை சாறு, கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஆறுவதற்காக எடுத்து வைக்கவும்.
 4. மூடுவதற்கு: அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் சேர்க்கவும். தேவைக்கேற்ப, தண்ணீர் சேர்த்து மாவைத் தயாரிக்கவும். முறுமுறுப்புத் தன்மையை இழந்துவிடும் என்பதால் ரொம்பவும் மென்மையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடைந்துவிடுவதால் மிகக் கடினமாகவும் இருக்கக்கூடாது.
 5. நன்றாகப் பிசைந்துகொள்க. மென்மையாவதற்கு 10 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
 6. மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகள் பிடித்து வட்ட வடிவில் உருட்டிக்கொள்க.
 7. வட்ட வடிவக் கவரின் மையப்பகுதியில் கொத்துமல்லி பூரணத்தை செவ்வக வடிவில் வைக்கவும்.
 8. விளிம்புகளில் சிறிது தண்ணீர் சேர்த்து நான்கு பக்கங்களையும் மடிக்கவும்.
 9. மிதமானச் சூட்டி அனைத்துப் பக்கங்களையும் 5-6 நிமிடங்கள் பொரிக்கவும்.
 10. மேல் பாகம் மிக அடர்த்தியாக மாறினால் தீயைக் குறைக்கவும்.
 11. எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். புளி இனிப்பு சட்னி/ சாஸ் மற்றும் காதியுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

பாரம்பரியமாக இந்த உணவு பொரிக்கப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்தை மனதில் கருதி உண்பவர்கள் குறைவான எண்ணெயை விரும்புகின்றனர். அதனால் இதை வேகவைக்கலாம் அல்லது பேக் செய்யலாம்.

Reviews for Sambhar Vadi in tamil (0)