Photo of Wedding breakfast  Thali by Subashini Krish at BetterButter
629
6
4.0(1)
0

Wedding breakfast Thali

Apr-08-2018
Subashini Krish
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி/தோசை மாவு :- இட்லி அரிசி 4 கப்
  2. வெள்ளை உளுந்து 1 கப்
  3. வெந்தயம் 1 மேஜைக்கரண்டி
  4. சின்ன வெங்காய ஊத்தப்பம்:- சின்ன வெங்காயம் உரித்தது 100 கிராம்
  5. சீரகம் 1 டீஸ்பூன்
  6. மினி இட்லி :- மினி இட்லி தட்டு 3
  7. சாம்பார்:- துவரம் பருப்பு 1 கப்
  8. புளி நெல்லிக்காய் அளவு
  9. சாம்பார் பொடி 1 மேஜைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  11. சின்ன வெங்காயம் 100 கிராம்
  12. முருங்கைக்காய் 4
  13. தக்காளி 2
  14. நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  15. கடுகு 1 தேக்கரண்டி
  16. சோம்பு+வெந்தயம் தூள் 1/2 தேக்கரண்டி
  17. பெருங்காயம் 1 சிட்டிகை
  18. கறிவேப்பிலை சிறிது
  19. கொத்தமல்லி தழை சிறிது
  20. துருவிய தேங்காய் 1 மேஜைக்கரண்டி
  21. தேங்காய் சட்னி :-
  22. துருவிய தேங்காய் 1/2 கப்
  23. பொட்டுக்கடலை 1 மேஜைக்கரண்டி
  24. இஞ்சி 1 சிறிய துண்டு
  25. பச்சை மிளகாய் 1
  26. தாளிக்க-கடுகு 1/2 தேக்கரண்டி
  27. கறிவேப்பிலை சிறிது
  28. பெருங்காயம் சிறிது
  29. ரவா கேசரி:- வெள்ளை ரவை 1/2 கப்
  30. சர்க்கரை 1/2 கப்
  31. தண்ணீர் 1 கப்
  32. நெய் 1/4 கப்
  33. ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன்
  34. முந்திரி 5 உடைத்தது
  35. திராட்சை 10
  36. கேசரி கலர் ஒரு சிட்டிகை
  37. வெங்காய பஜ்ஜி:-பெரிய வெங்காயம் 2
  38. பஜ்ஜி மாவு 200 கிராம்
  39. பொரிக்க தேவையான எண்ணெய்
  40. பில்டர் காஃபி பால் 3/4 லிட்டர்
  41. காஃபி டிகாஷன் 100 மில்லி
  42. சர்க்கரை 3 மேஜைக்கரண்டி
  43. இட்லி பொடி:- உளுந்து 1/4 கப்
  44. கடலை பருப்பு 1/2 கப்
  45. வரமிளகாய் 10
  46. கறிவேப்பிலை 1 கைப்பிடி
  47. எள் 1 மேஜைக்கரண்டி
  48. பெருங்காயம் சிறிது
  49. அனைத்து பதார்த்தத்திற்கும் தேவையான உப்பு
  50. தேவையான தண்ணீர்

வழிமுறைகள்

  1. அரிசி,உளுந்து வெந்தயம் 3 மணி நேரம் ஊற வைத்து பதமாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  2. சாம்பாருக்கு:- துவரம் பருப்பை குழைய வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முருங்கை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். சாம்பார் பொடி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்து பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். தக்காளி சேர்த்து , புளி கரைசல் ஊற்றி கொதிக்க விடவும். நல்லெண்ணெயில்.கடுகு, சோம்பு+ வெந்தயம் தூள்,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி தழை, துருவிய தேங்காய் சேர்த்து அலங்கரிக்கவும். சாம்பார் தயார்
  3. சட்னிக்கு:- ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டவும். சட்னி தயார்.
  4. மினி சாம்பார் இட்லி:- மினி இட்லி தட்டுகளில் சிறிது எண்ணெய் தடவி இட்லி வார்த்து கொள்ளவும். வேண்டிய அளவு சாம்பாரில் ஊற வைத்து நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்
  5. சின்ன வெங்காயம் தோசை:- சின்ன வெங்காயத்தை வட்டதுண்டுகளாக நறுக்கி சீரகம் சேர்த்து பிசறி வைக்கவும் சிறிய ஊத்தப்பம் வார்த்து வெங்காயம் தூவி நன்கு சிவக்க வேக வைத்து கொள்ளவும்
  6. ரவா கேசரி:-நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து கொள்ளவும். அதே நெய்யில் ரவை வறுத்து கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து ரவை சேர்த்து கிளறி, சர்க்கரை, கேசரி கலர், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து தட்டில் கொட்டி துண்டு போடவும்
  7. வெங்காய பஜ்ஜி:- பெரிய வெங்காயம் தோல் நீக்கி மெலிதான வட்டத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பஜ்ஜி மாவை பதமாக கரைத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  8. இட்லி பொடி:- பொடிக்கான அனைத்து பொருட்களையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆற வைத்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். நல்லெண்ணெய் கலந்து பரிமாறவும்
  9. பில்டர் காஃபி:- பாலை நன்கு காய்ச்சி டிகாஷன், சர்க்கரை சேர்த்து நுரைக்க ஆற்றி சூடாக பரிமாறவும்.
  10. தயாரித்த அனைத்து உணவுகளையும் தலை வாழை இலையில் பரிமாறி அசத்தவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Apr-08-2018
Saranya Manickam   Apr-08-2018

wonderful..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்