வீடு / சமையல் குறிப்பு / தினை ஸ்வீட்கான் சாட் பிளேவர்ட் இட்லி

Photo of Thinai sweetcorn chat flavored idly by Krishnasamy Vidya Valli at BetterButter
93
3
0.0(0)
0

தினை ஸ்வீட்கான் சாட் பிளேவர்ட் இட்லி

Apr-09-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தினை ஸ்வீட்கான் சாட் பிளேவர்ட் இட்லி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுவையில் அதேநேரம் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் இது.ஒருவருக்கு இரண்டு வீதம் இரண்டுபேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட்கான் -1/4 கப்
  2. தினை அரிசி -1/8 கப் +2 தேக்கரண்டி
  3. தயிர் -1/8 கப்
  4. பச்ச பட்டாணி - 2 மேஜைக்கரண்டி
  5. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் -2 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  7. வெங்காயம், கேரட், பொடியாக நறுக்கியது- தலா 2 தேக்கரண்டி
  8. சாட் மசாலா -1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா -4 சிட்டிகை
  10. மிளகு பொடி, சீரக ப்பொடி , தனியா பொடி- தலா 2 சிட்டிகை
  11. தக்காளி சாஸ் -1 தேக்கரண்டி
  12. சில்லி சாஸ் -1/2 தேக்கரண்டி
  13. உப்பு -3/4 தேக்கரண்டி
  14. இட்லி தட்டில் தடவுவதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தினை அரிசியை வெறும் கடாயில் வறுக்கவும்
  2. அதோடு ஸ்வீட்கான் தயிர் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  3. அரைத்ததுடன் கொடுக்கப்பட்ட மற்ற எல்லா பொருட்கள் (எண்ணெய் தவிர) சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  4. இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  5. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. விருப்பப்பட்டால் சாம்பார் சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்