வீடு / சமையல் குறிப்பு / தால் வெஜிடபுள் இட்லி

Photo of Dal vegetable idly by Krishnasamy Vidya Valli at BetterButter
143
3
0.0(0)
0

தால் வெஜிடபுள் இட்லி

Apr-09-2018
Krishnasamy Vidya Valli
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தால் வெஜிடபுள் இட்லி செய்முறை பற்றி

ஆரோக்கியமாக எளிதில் செய்யப்படும் இட்லி இது. குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான டிபன்.ஒருவருக்கு மூன்று வீதம் இரண்டு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு -1/4 தேக்கரண்டி
  2. கடலைப்பருப்பு -1 மேஜைக்கரண்டி
  3. துவரம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  4. பச்சரிசி/இட்லி அரிசி -2 மேஜைக்கரண்டி
  5. உப்பு -1 தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் -1
  7. பச்ச மிளகாய் -1
  8. பெருங்காயம் -2 சிட்டிகை
  9. வெங்காயம் -1
  10. உருளைக்கிழங்கு -1
  11. கேரட் -1
  12. தக்காளி -1
  13. குடைமிளகாய் -1/2
  14. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  15. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  16. தாளிக்க
  17. எண்ணெய் -1 தேக்கரண்டி
  18. சீரகம் -1 /2 தேக்கரண்டி
  19. பச்ச மிளகாய் -1
  20. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  21. இட்லி தட்டில் தடவுவதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும்
  2. தண்ணீரை வடித்து விட்டு அரைத்தேக்கரண்டி உப்பு பச்ச மிளகாய், மிளகாய் வத்தல், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் அரைத்தேக்கரண்டி உப்பு , மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்கள் சேர்த்து வதக்கவும்
  4. வதக்கியதை கொத்தமல்லி இலையை சேர்த்து அரைத்ததுடன் கலந்து கொள்ளவும் . தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வைத்துக்கொள்ளவும்
  5. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவு விட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
  6. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர்/சாம்பார்/சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்