Photo of Spinach vegetable pasta by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
503
8
0.0(2)
0

Spinach vegetable pasta

Apr-09-2018
Wajithajasmine Raja mohamed sait
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Spinach vegetable pasta செய்முறை பற்றி

ஸ்பினாச் வெஜிடபிள் பாஸ்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்தா -1 கப்
  2. ஸ்பினாச் 10 இலைகள்
  3. பால் -1 கப்
  4. வெண்ணெய் -4 தேக்கரண்டி
  5. மைதா -2 தேக்கரண்டி
  6. முந்திரி -10
  7. கேரட் -1 பொடியாக நறுக்கியது
  8. காளான் -3 பொடியாக நறுக்கியது
  9. கார்ன் -3 தேக்கரண்டி
  10. சீஸ் - 5 தேக்கரண்டி
  11. பேசில் இலை -1 தேக்கரண்டி
  12. மிளகு பொடி- சிறிதளவு
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாஸ்தாவை சிறிதளவு உப்பு ,எண்ணெய் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து அதில் ஸ்பினாச் மற்றும் முந்திரி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.
  4. சூடு ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .
  5. மற்றொரு கடாயில் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து அதனுடன் 2 தேக்கரண்டி மைதாவை சேர்த்து கிளறவும். (வெள்ளை சாஸ் தயார் செய்யவும்)
  6. பின்பு அதனுடன் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டி இல்லாமல் கிளறவும்.
  7. பால் முழுவதும் ஊற்றி கிளறி எடுத்து வைத்துக்கொள்ளவும்.இப்பொழுது வெள்ளை சாஸ் தயார்.
  8. கடாயில் மீதமுள்ள வெண்ணெய்யை சேர்த்து பொடியாக நறுக்கிய காய்கறிகள் ,உப்பு சேர்த்து வதக்கவும் .
  9. காய்கள் நன்கு வதங்கியதும் அதனுடன் சிறிதளவு மிளகு பொடி மற்றும் 1 தேக்கரண்டி பேசில் இலையை சேர்த்து வதக்கவும் .
  10. இப்பொழுது இதனுடன் தயார் செய்து வைத்துள்ள வெள்ளை சாஸ் ஊற்றி நன்கு கிளறவும்.
  11. பின்பு அரைத்து வைத்துள்ள ஸ்பினாச் முந்திரி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
  12. நன்கு கிளறியதும் அதனுடன் வேகவைத்துள்ள பாஸ்தாவை சேர்க்கவும்.
  13. பாஸ்தாவை நன்கு சாஸ் உடன் மிக்ஸ் செய்ய சிறிது நேரம் நன்றாக கிளறவும் .
  14. இறுதியாக அதனுடன் சீஸை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும் .
  15. சுவையான கலரான ஸ்பினாச் வெஜிடபிள் பாஸ்தா தயார்.சாப்பிடும் பொழுது சிறிதளவு சீஸ் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajamohamed Sait
Apr-10-2018
Rajamohamed Sait   Apr-10-2018

Yumm

Hameetha Banu
Apr-09-2018
Hameetha Banu   Apr-09-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்