வீடு / சமையல் குறிப்பு / Festival special breakfast receipes

Photo of Festival special breakfast  receipes by hajirasheed haroon at BetterButter
685
5
0.0(1)
0

Festival special breakfast receipes

Apr-10-2018
hajirasheed haroon
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Festival special breakfast receipes செய்முறை பற்றி

அனைவரும் விரும்பி உண்ண கூடிய உணவுகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி செய்வதற்கு தேவையான பொருள்கள்
  2. இட்லி அரிசி 4 டம்ளர்
  3. உளுத்தம் பருப்பு 1டம்ளர்
  4. ஊத்தாப்பம் செய்ய இட்லி மாவை பயண்படுத்தி கொள்ளலாம்
  5. வெங்காயம் கொத்தமல்லி இலை எண்ணெய்
  6. சப்பாத்தி செய்வதற்கு தேவையானவை
  7. கோதுமை மாவு 1கப்
  8. உப்பு
  9. தண்ணீர்
  10. பாயாசம் செய்வதற்கு ,தேவையான பொருள்கள்
  11. பால் 1 டம்ளர்
  12. சேமியா 2ஸ்பூன்
  13. ரவை 1ஸ்பூன்
  14. சர்க்கரை 1/4கப்
  15. நெய் முந்திரிப் பருப்பு தாளிப்பதற்கு
  16. உக்கார செய்வதற்கு தேவையானவை
  17. பாசி பருப்பு 1/4 கப்
  18. வெல்லம் 1/4 கப்
  19. நெய் 2ஸ்பூன்
  20. முந்திரிப் பருப்பு தாளிப்பதற்கு
  21. உளுந்த வடை செய்வதற்கு தேவையான பொருள்கள்
  22. உளுத்தம் பருப்பு 1கப்
  23. மிளகு 1/4ஸ்பூன்
  24. வெங்காயம் 1
  25. பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  26. வெள்ள பனியாரம் செய்ய தேவையான பொருள்கள்
  27. பச்சை அரிசி 1டம்ளர்
  28. உளுத்தம் பருப்பு 1/4 டம்ளர்
  29. உப்பு 1பின்ச்
  30. எண்ணெய் பொறிப்பதற்கு
  31. பால் பனியாரம் செய்வதற்கு தேவையான பொருள்கள்
  32. பச்சை அரிசி 1/4கப்
  33. உளுத்தம் பருப்பு 1/4கப்
  34. தேங்காய் 1/4மூடீ
  35. சர்க்கரை 1/4 டம்ளர்
  36. உப்பு 1 பின்ச்
  37. ஏலக்காய் 1
  38. எண்ணெய்
  39. பால் பனியார மாவை சுவியம் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
  40. மாவு 3 ஆப்ப கரண்டி
  41. பூரணம் செய்வதற்கு
  42. கடலை பருப்பு 4 ஸ்பூன்
  43. வெல்லம்
  44. தேங்காய் துருவல்
  45. ஏலக்காய் 1
  46. பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  47. கந்தர்ப்பம் செய்ய தேவையான பொருள்கள்
  48. பச்சை அரிசி 1கப்
  49. உளுத்தம் பருப்பு 3 ஸ்பூன்
  50. கடலைப் பருப்பு 1ஸ்பூன்
  51. வெந்தயம் 1பின்ச்
  52. வெல்லம் 3/4கப்
  53. தேங்காய் துருவல் ஸ்பூன்3
  54. உப்பு 1பின்ச்
  55. ஏலக்காய் பொடி 1 பின்ச்
  56. பொறிப்பதற்கு எண்ணெய்
  57. சாம்பார் செய்ய தேவையான பொருள்கள்
  58. துவரம் பருப்பு 1 கப்
  59. வெங்காயம் 2
  60. தக்காளி 1
  61. உப்பு
  62. புளி
  63. மஞ்சள் தூள்
  64. சாம்பார் தூள்
  65. பெருங்காய தூள்
  66. காய்கள்
  67. எண்ணெய் ,கடுகு,சீரகம்,கொத்தமல்லி,கரிவேப்பிலை தாளிப்பதற்கு
  68. தேங்காய் சட்னி செய்வதற்கு தேவையான பொருள்கள்
  69. தேங்காய் 2சில்
  70. பொட்டுக் கடலை 3ஸ்பூன்
  71. பச்சை மிளகாய் 1
  72. பூண்டு 2பல்
  73. உப்பு தேவையான அளவு
  74. கடுகு,உளுந்து,கரிவேப்பிலை,எண்ணெய் தாளிப்பதற்கு
  75. தக்காளி சட்னி செய்ய தேவையான பொருள்கள்
  76. தக்காளி 2
  77. வெங்காயம்
  78. காய்ந்த மிளகாய் 4
  79. உளுத்தம் பருப்பு
  80. உப்பு தேவையான அளவு
  81. கடுகு,உளுந்து,கரிவேப்பிலை,எண்ணெய் தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. இட்லி செய்ய அரிசி ,பருப்பு இரண்டையும் மூன்று மணி நேரம் ஊற விட்டு கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த மாவில் உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும்
  3. இட்லி பாத்திரத்தில் ஊற்றி 10 நிமிடம் வேக விடவும்
  4. ஊத்தாப்பம் செய்ய இட்லி மாவில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து சிறிதாக ஊற்றி அதன் மேல் வெங்காயம் கொத்தமல்லிஇலை தூவி வேக விடவும்
  5. சப்பாத்தி செய்ய கோதுமை மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசையவும்
  6. சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்
  7. பாயாசம் செய்ய பாலைக் காய்ச்சவும்.
  8. பால் கொதித்த உடன் ரவை,சேமியா சர்க்கரை சேர்த்து வேக விடவும்,
  9. ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பு தாளித்து பாலில் ஊற்றவும்,
  10. உக்கார செய்ய பாசிப் பருப்புடன் ஏலக்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  11. பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விடவும்
  12. வெல்லத்தை பொடியாக நைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதனை வடிகட்டி பருப்பில் ஊற்றி விடவும் அதில் நெய் ஊற்றி சுருள கிளறவும்
  13. நெய் முந்திரிப்பருப்பு தாளித்து ஊற்றவும்
  14. உளுந்த வடை செய்ய பருப்பை 1/2மணி நேரம் ஊற விடவும்
  15. பருப்பை அரைத்து அதில் வெங்காயம் ,மிளகு சேர்த்து தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்,
  16. வெள்ளை பனியாரம் செய்ய
  17. அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஊற வைத்து நைசாக அரைக்கவும்
  18. உப்பு சேர்த்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  19. தக்காளி சட்னி தொட்டு சாப்பிடலாம்,
  20. பால் பனியாரம் செய்ய அரிசி பருப்பு இரண்டையும் ஊற வைத்து அரைக்கவும் அரைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்து நைசாகஅரைக்கவும்
  21. மாவில் சிறிது உப்பு சேர்த்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  22. தேங்காயைய் துருவி மிக்சியில் அரைத்து பால் எடுக்கவும் தேங்காயைய் அரைக்கும் போது ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்
  23. தேங்காய்ப் பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும் பொறித்து வைத்துள்ள சிறிய பனியாரங்களை போட்டு ஊற விடவும்
  24. சுவியம் செய்ய பால் பனியார மாவில் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  25. கடலைப் பருப்புடன் ஏலக்காய் சேர்த்து வேக விட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ள
  26. வெல்லத்தை பொடியாக நைத்துப் பருப்புடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டை பிடிக்கவும்
  27. பிசைந்து வைத்துள்ள மாவில் உருண்டைகளை போட்டு சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  28. கந்தர்ப்பம் செய்ய அரிசி பருப்பு,கடலைப் பருப்பு ,வெந்தயம் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடாவும்
  29. வெல்லத்தை கெட்டியாக பாகு எடுத்துக் கொள்ளவும்
  30. அரிசி கலவையை மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  31. மாவில் வெல்லப் பாகு,ஏலக்காய் தூள் உப்பு சேர்த்து கலந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  32. சாம்பார் செய்ய பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்
  33. வெந்த பருப்புடன் வெங்காயம்,தக்காளி,கத்திரிக்காய் பீன்ஸ் உப்பு மஞ்சள் தூள் புளி கரைசல் சேர்த்து காய்களை வேக விடவும்
  34. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து பொறிய விடவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கரிவேப்பிலை பொன்னிறமாக வதக்கி அதில் பெருங்காயம் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
  35. பருப்பை ஊற்றிக் கொதிக்க விடவும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
  36. தேங்காய் சட்னி செய்ய
  37. தேங்காயைத் துருவி கொள்ளவும் அதில் பொட்டுக் கடலை பச்சை மிளகாய் பூண்டு உப்பு சேர்த்து அரைக்கவும்
  38. கடுகுஉளுந்து கரிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும்
  39. தக்காளி சட்னி செய்ய
  40. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தை பொன்னிறமாக பொறிய விடவும்
  41. காய்ந்த மிளகாய் நறுக்கிய வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கி ஆற விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் கடுகு கரிவேப்பிலை தாளித்து ஊற்றவும்,

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Waheetha Azarudeen
Apr-10-2018
Waheetha Azarudeen   Apr-10-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்