வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தோசை

Photo of TOMATO DOSA by Subashini Krish at BetterButter
365
2
0.0(0)
0

தக்காளி தோசை

Apr-10-2018
Subashini Krish
210 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தோசை செய்முறை பற்றி

தக்காளியை அரைத்து மாவில் சேர்த்து செய்யும் இந்த தோசைக்கு மாவு புளிக்க தேவையில்லை. மிதமான புளிப்புடன் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி 1 கப்
  2. பச்சரிசி 1/2 கப்
  3. உளுந்து 1 மேஜைக்கரண்டி
  4. வெந்தயம்1 தேக்கரண்டி
  5. பழுத்த நாட்டு தக்காளி 4
  6. பச்சை மிளகாய் 2
  7. சின்ன வெங்காயம் 1 கைப்பிடி
  8. பூண்டு 5 பல்
  9. இஞ்சி அரை அங்குலம்
  10. சீரகம் 1 தேக்கரண்டி
  11. மிளகு 1 தேக்கரண்டி
  12. பெருங்காயம் சிறிது
  13. கறிவேப்பிலை சிறிது
  14. கொத்தமல்லி தழை 1 கைப்பிடி
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி,உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கிரைண்டரில் இட்டு மாவாக ஆட்டிக்கொள்ளவும்
  3. ஒரு மிக்ஸியில் தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, இஞ்சி,பூண்டு உள்ளிட்ட பொருட்களை விழுதாக அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த விழுதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு சுற்று மட்டும் சுற்றவும்
  5. அரைத்த விழுதை மாவில் சேர்க்கவும்
  6. உப்பு,பெருங்காயம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.
  7. மெல்லிய தோசைகளாக வார்த்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
  8. மாவை புளிக்க வைக்க தேவையில்லை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்