வீடு / சமையல் குறிப்பு / சாமை தினை பக்கோடா

Photo of Foxtail little millet pakora by Saivardhini Badrinarayanan at BetterButter
159
4
0.0(0)
0

சாமை தினை பக்கோடா

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாமை தினை பக்கோடா செய்முறை பற்றி

சுவையான மாலை நொறுக்கு திண்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாமை சாதம் 1 கப்
  2. திணை மாவு 1/2 கப்
  3. வெங்காயம் 1
  4. அரிசி மாவு 1/4 கப்
  5. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  6. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  7. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை
  10. முந்திரி 8
  11. கொத்துமல்லி இலை
  12. உப்பு
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் சாமை அரிசியை நன்கு சுத்தம் செய்து 1 : 2 அளவில் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் திணை அரிசியை ஒரு கடாயில் சேர்த்து நன்கு வாசம் வரும்வரை பொன்னிறமாக வறுத்து ஆறியபின் நன்கு பொடித்து கொண்டால் திணை மாவு தயார்.
  3. பின் வேக வைத்த சாமை சாதத்தை நன்கு மசித்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் திணை மாவு, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், ஜீரக தூள், கரம் மசாலா, கருவேப்பிலை, முந்திரி, கொத்துமல்லி இலை , உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும்)
  4. பின் எண்ணெய் காய்ந்த பின் பகோடாவாக போட்டு பொன்னிறமாக மொறு மொறுவென்று பொரித்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்