கொய்யா பன்னீர் | KHOYA PANEER in Tamil

எழுதியவர் Shaheen Ali  |  13th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of KHOYA PANEER by Shaheen Ali at BetterButter
கொய்யா பன்னீர்Shaheen Ali
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2750

0

Video for key ingredients

  • How to make Khoya

கொய்யா பன்னீர் recipe

கொய்யா பன்னீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make KHOYA PANEER in Tamil )

  • காட்டேஜ் வெண்ணெய் - 250 கிராம்
  • தக்காளி - 4 சாந்துசெய்யப்பட்டது
  • வெங்காயம் - 2 நடுத்தர அளவு நறுக்கியது
  • இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய்ச் சாந்து - 1 தேக்கரண்டி
  • கொய்யா - 1 கப் துருவியது
  • முந்திரிபருப்பு - 8 ஊறவைத்தது
  • கஸ்தூரி வெந்தயம் - 1 தேக்கரண்டி நசு்ககியது
  • மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  • சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை - 1
  • உப்பு - தேவையான அளவு
  • சர்க்கரை - 1 சிட்டிகை
  • பால் - 1/2 கப்
  • எண்ணெய்/வெணணெய் - 3-4 தேக்கரண்டி
  • அலங்கரிப்பதற்காக - புதிய கிரீமும் கொத்துமல்லியும்

கொய்யா பன்னீர் செய்வது எப்படி | How to make KHOYA PANEER in Tamil

  1. 1 தேக்கரண்டி வெண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி நறுக்கிய வெங்காயத்தோடு ஊறவைத்த முந்திரி பருப்பை பொன்னிறமாக வதக்கிக்கொள்க. அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிடவும். கலவை ஆறியதும், அதை ஒரு மிக்சர் கிரைண்டரில் மாற்றி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அதே கடாயில் துருவிய கொய்யாவை 1-2 தேக்கரண்டி வெண்ணெயோடு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. எண்ணெய்/வெண்ணெயை ஒரு வானலியில் சூடுபடுத்தி பரிஞ்சி இலையோடு கஸ்தூரி வெந்தயம், இஞ்சி, பச்சை மிளகாய் சாந்தை சேர்க்கவும். சில விநாடிகள் வறுக்கவும்.
  4. இப்போது வெங்காயத்தையும் முந்திரி பருப்பு சாந்தையும் வானலியில் சேர்த்து நல்ல வாசனை வரும்வரை வறுக்கவும்.
  5. இப்போது சாந்தாக்கப்பட்ட தக்காளியை மல்லித்தூளோடு, சிவப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் பக்கவாட்டிலிருந்து கசியும்வரை நன்றாக வறுக்கவும்.
  6. குழம்பு அடர்த்தியாகத் துவங்கியதும், கொய்யாவைச் சேர்த்து, கொய்யா ஒன்றரறக் கலக்கும்வரை கலக்கவும்.
  7. குழம்பில் தேவையான உப்பும் ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்த்துச் சுவையூட்டி நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  8. குழம்பு கொதிப்பதற்காக 1/2 கப் பாலைச் சேர்த்து, தீயைக் குறைத்து குழம்பை மூடி சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  9. குழம்பு வெந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு மெதுவாகக் குழம்பைக் கிளறவும்.
  10. கொய்யா பன்னீர் குழம்பை, மேலே புதிய கீரீம் வைத்து, கொஞ்சம் துருவியப் பன்னீரையும் நறுக்கிய கொத்துமல்லியையும் சேர்த்து அலங்கரிக்கவும்.

Reviews for KHOYA PANEER in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.