Photo of Onion Rings by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
415
5
0.0(2)
0

Onion Rings

Apr-12-2018
Wajithajasmine Raja mohamed sait
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Onion Rings செய்முறை பற்றி

ஆனியன் ரிங்ஸ் அனைவருக்கும் விருப்பமான ஒரு வகை சிநாக்ஸ்.வெங்காயத்தை வைத்து மிக எளிதாக செய்யக்கூடிய ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் பெரியது -1
  2. மைதா -4 தேக்கரண்டி
  3. கார்ன் பிளார் மாவு- தேக்கரண்டி
  4. பிரட்கிரம்ஸ்-1 கப்
  5. மிளகு தூள் -1/2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள்- 1/4 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  3. .வெட்டிய வெங்காயத்தை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் மைதா,கார்ன் பிளார் ,2 தேக்கரண்டி பிரட் கிரம்ஸ்,மிளகு தூள்,மிளகாய் தூள் ,உப்பு,சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு கிளறவும் .
  5. இப்பொழுது வெங்காயத்தை இந்த மாவில் லேசாக பிரட்டி எடுக்கவும் .
  6. இப்பொழுது மாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொண்டு வெங்காயத்தை இரண்டு பக்கமும் நன்கு முக்கி எடுத்துக்கொள்ளவும்.
  7. பிறகு பிரட் கிரம்ஸில் நன்கு பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
  8. இப்பொழுது அனைத்து வெங்காயத்தையும் மாவு மற்றும் பிரட் கிரம்ஸில் பிரட்டிய பிறகு 10 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.
  9. 10 நிமிடங்கள் கழித்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து பொரித்து எடுக்கவும் .
  10. இப்பொழுது சுவையான ஆனியன் ரிங்ஸ் தயார்.தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rahumath Nisha
Apr-13-2018
Rahumath Nisha   Apr-13-2018

Priya Mohan
Apr-12-2018
Priya Mohan   Apr-12-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்