சுரைக்காய் கோஃப்டா | Lauki Kofte in Tamil

எழுதியவர் sapana behl  |  13th Apr 2016  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Lauki Kofte by sapana behl at BetterButter
சுரைக்காய் கோஃப்டாsapana behl
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3922

1

சுரைக்காய் கோஃப்டா recipe

சுரைக்காய் கோஃப்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Lauki Kofte in Tamil )

 • 5 கப் தண்ணீர் அல்லது தேவையான அளவு
 • 1/2 கப் கொத்துமல்லி, நறுக்கியது
 • சமையல் எண்ணெய், பொரிப்பதற்கு
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி உலர் வெந்தயக் கீரை இலைகள்
 • 2 கப் தக்காளி சாந்து
 • சாந்துக்காக: 2 வெங்காயம், நறுக்கப்பட்ட 5-6 பூண்டு பற்கள் 1/2 இஞ்சி, நறுக்கிய 4 பச்சை மிளகாய்
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1/4 கப் கொத்துமல்லி, நறுக்கியது
 • 2 பச்சை மிளகாய், நறுக்கியது
 • 2 தேக்கரண்டி கடலை மாவு
 • 2 தேக்கரண்டி சோள மாவு
 • கோஃப்டாவுக்கு 250 கிராம் சுரைக்காய், துருவியது

சுரைக்காய் கோஃப்டா செய்வது எப்படி | How to make Lauki Kofte in Tamil

 1. கோஃப்தாவுக்காக ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருள்களையும் கலந்துகொள்ளவும். சிறுசிறு உருண்டைகள் சம அளவில் செய்துகொள்க. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கோஃப்தாவின் இரு பக்கங்களையும் வறுத்துக்கொள்ளவும்.
 2. பேப்பர் துண்டில் வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஃபுட் பிராசசரில் சாந்து தயாரித்துக்கொள்ளவும்.
 3. அதிகப்படியான எண்ணையை வானலியில் இருந்து எடுத்துவிடவும், அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் இருக்கும். உலர் வெந்தயக் கீரை, சீரகத்தைச் சேர்க்கவும். 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
 4. இவற்றோடு சாந்தைச் சேர்க்கவும். மசாலாக்களையும் உப்பையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
 5. இப்போது தக்காளி சாந்து சேர்த்து எண்ணெய் பக்கவாட்டிலிருந்து வெளிவரும்வரை வதக்கவும். தண்ணீர் சேர்த்துச் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்போது ஏற்கனவே தயாரித்துள்ள கோஃப்தாக்களை குழம்பில் சேர்க்கவும். சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
 6. பரிமாறி மகிழவும்.
 7. மேலே தயாரிக்கப்பட்ட சாந்தைச் சேர்த்து வதக்கவும்; 10-15 நிமிடங்கள் சிறு தீயில் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

Reviews for Lauki Kofte in tamil (1)

jeyaveni chinniah2 years ago

I couldn't understand :neutral_face:
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.