வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் சமோசா

Photo of Onion Samosa by Saivardhini Badrinarayanan at BetterButter
474
3
0.0(0)
0

ஆனியன் சமோசா

Apr-13-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் சமோசா செய்முறை பற்றி

சுவையான டீ உடன் பருக ஆனியன் சமோசா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. மைதா 1/2 கப்
  3. வெங்காயம் 3
  4. உப்பு
  5. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  6. மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
  7. கருவேப்பிலை
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் மைதா மற்றும் கோதுமை மாவு , உப்பு எண்ணெய் 1 மேஜைக்கரண்டி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்வதும்.
  2. பின் ஒரு துணியில் 3 வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி உப்பு சேர்த்து கலந்து உலர வைக்கவும்.
  3. நன்கு வெங்காயம் உலர்ந்த பின் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கருவேப்பிலை நறுக்கியது சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வட்டமாக மிகவும் லேசாக தேய்க்கவும்.
  5. தேய்த்த மாவை தோசை கல்லில் இட்டு அரவேக்காடாக சுட்டு எடுக்கவும்.
  6. பின் அதை 4 ளாக நறுக்கி கொள்ளவும்.
  7. ஒரு பாதியை எடுத்து கோன் வடிவில் செய்து மைதா பசை வைத்து ஒட்டவும்.
  8. இந்த கோனில் வெங்காயக்கலவை வைத்து மூன்றாவது பக்கத்தை மைதா பசை தேய்த்து ஒட்டவும்.
  9. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்