Photo of Aloo Rolls by Saivardhini Badrinarayanan at BetterButter
300
3
0.0(0)
0

ஆலு ரோல்ஸ்

Apr-13-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு ரோல்ஸ் செய்முறை பற்றி

சுவையான மொறு மொறுன்னு ஆலு ரோல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. மைதா 1/2 கப்
  3. உருளைக்கிழங்கு 2
  4. கேரட் 1
  5. வெங்காயம் 1
  6. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மல்லி தூள் 2 மேஜைக்கரண்டி
  8. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  9. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைகிழங்கை 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , மைதா மாவு , உப்பு சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  3. பின் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும். அதில் கேரட் துருவல், மிளகாய்த்தூள், மல்லித்தூள் , ஜீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் சிறிய உருண்டைகளாக உருட்டி நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும்.
  5. தேய்த்த மாவுவில் கிழங்கு கலவையை தடவவும்.
  6. பின் அதை உருட்டி சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்