வீடு / சமையல் குறிப்பு / பண்டிகை கால நொறுக்கு தின்பண்டம்

Photo of Festival Snacks by Saivardhini Badrinarayanan at BetterButter
218
4
0.0(0)
0

பண்டிகை கால நொறுக்கு தின்பண்டம்

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பண்டிகை கால நொறுக்கு தின்பண்டம் செய்முறை பற்றி

சுவையான பண்டிகை கால தின்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1 கப்
  2. சக்கரை 3/4 கப்
  3. பால்
  4. முந்திரி
  5. திராட்சை
  6. வெள்ளை எள்ளு 2 கப்
  7. வெல்லம் 3 கப்
  8. நெய் 5 மேஜைக்கரண்டி
  9. அரிசி மாவு 1 கப்
  10. வெள்ளரி விதை 3 மேஜைக்கரண்டி
  11. இட்லி அரிசி 2 கப்
  12. பொட்டுக்கடலை 1 கப்
  13. வெண்ணெய் 50 கிராம்
  14. மிளகாய் தூள் 20 கிராம்
  15. உப்பு
  16. அரிசி மாவு 1 கப்
  17. உளுந்து மாவு 2 மேஜைக்கரண்டி
  18. பெருங்காயத்தூள்
  19. உப்பு
  20. தேங்காய் பால் 1/4 கப்
  21. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ரவா லட்டு : ஒரு கடாயில் நெய் சேர்த்து காய்ந்த பின் முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கிய பின் ரவை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  2. பின் சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பின் சூடு லேசாக ஆறியபின் பால் சேர்த்து நன்கு கலந்து சூடு ஆறுமுன் உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.
  3. எள்ளு உருண்டை : ஒரு கடாயில் 1 கப் எள்ளு சேர்த்து நன்கு வறுக்கவும். பின் ஆறியவுடன் ஒரு மிக்ஸில் போட்டு 3/4 கப் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.
  4. சிம்பிலி : ஒரு மிக்ஸில் 1 கப் வெள்ளை எள்ளு , 3/4 கப் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து உருண்டைகளாக பிடிக்கவும்.
  5. மாவிளக்கு : ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
  6. கரைத்த வெல்லத்தை வடிகட்டி கொள்ளவும்.பின் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
  7. வெல்லம் ஒரு கம்பி பதம் வருவரை விடவும்.பின் அதில் அரிசி மாவு ,வெள்ளரி விதை , நெய் சேர்த்து கலந்து விருப்பப்பட்டால் உருண்டைகளாக பிடிக்கவும். இல்லையேல் தட்டில் போட்டி வில்லைகள் போடவும்.
  8. பாசிப்பருப்பு லட்டு : ஓர் கடாயில் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வாசனை வருவரை வறுக்கவும்.
  9. பின் ஒரு மிக்ஸில் வறுத்த பாசிப்பருப்பு சேர்த்து சக்கரை சேர்த்து நைசாக அரைக்கவும்.
  10. பின் 5 மேஜைக்கரண்டி நெய் காய்ச்சி அரைத்த மாவில் ஊற்றி கலந்து சூடு ஆறுமுன் உருண்டைகளாக பிடிக்கவும்.
  11. தட்ட முறுக்கு : இட்லி அரிசியை 1அனி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நன்கு மைய அரைக்கவும்.
  12. பின் அரைத்த மாவில் பொட்டுக்கடலை மாவு , வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு, ஊறவைத்த கடலை பருப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக பிடித்து ஒரு காகித கவரில் எண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து ஒரு கிண்ணத்தை வைத்து வட்டமாக அழுத்தி கொள்ளவும்.
  13. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து ஒவொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
  14. ரிங் முறுக்கு : பிசைந்த தட்ட முறுக்கு மாவை கொஞ்சம் எடுத்து நீளமாக உருட்டி வட்டமாக சுருட்டவும்.
  15. பின் எண்ணெய் காய்ந்த பின் ரிங் முறுக்கு சேர்த்து நன்கு பொன்னிரமாக பொரித்து எடுக்கவும்.
  16. கை முறுக்கு : அரிசி மாவு 1 கப் , உளுந்து மாவு 2 மேஜைக்கரண்டி, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  17. பின் எண்ணெய் காய்ந்த பின் ஒவொன்றாக கையில் சுற்றி போட்டு பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்