ராஜஸ்தானி கேட்டே கி சப்ஜி | Rajasthani Gatte ki Sabji in Tamil

எழுதியவர் Shaheen Ali  |  14th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Rajasthani Gatte ki Sabji recipe in Tamil,ராஜஸ்தானி கேட்டே கி சப்ஜி, Shaheen Ali
ராஜஸ்தானி கேட்டே கி சப்ஜிShaheen Ali
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

7430

0

ராஜஸ்தானி கேட்டே கி சப்ஜி recipe

ராஜஸ்தானி கேட்டே கி சப்ஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Rajasthani Gatte ki Sabji in Tamil )

 • வெங்காயம் - 2 நடுத்தர அளவு அரைத்துக்கொள்ளப்பட்டது
 • கடலை மாவு - 1 1/2 கப்
 • இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
 • பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • தயிர் - 1 கப்
 • சிவப்பு மிளகாய் - 2, உடைத்தது
 • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
 • சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • கடுகு - 1/2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 2 பிளக்கப்பட்டது
 • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய்த் தூள் - 3/4 தேக்கரண்டி
 • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
 • கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - 4-5 தேக்கரண்டி
 • கொத்துமல்லி - புதியது நறுக்கப்பட்டது அலங்கரிப்பதற்காக
 • 1 1/2 கப் கடலை மாவு

ராஜஸ்தானி கேட்டே கி சப்ஜி செய்வது எப்படி | How to make Rajasthani Gatte ki Sabji in Tamil

 1. கேட்டேவை எப்படித் தயாரிப்பது: ஒரு பெரியக் கலவைப் பாத்திரத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள உலர் சேர்வைப்பொருள்களைச் சேர்க்கவும். மெதுவாகத் தண்ணீர் சேர்த்து இறுக்கமான மாவாக பிசைந்துகொள்ளவும். பூரிக்குச் செய்வதுபோல் தயாரித்துக்கொள்ளவும்.
 2. 5 நிமிடத்திற்கு விட்டுவைக்கவும். இதற்கிடையில் ஒரு வானலி நிறையத் தண்ணீரைச் சூடுபடுத்தி கொஞ்சம் உப்பு சில துளிகள் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
 3. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், உருளை ரிப்பன்களைத் தண்ணீரில் விட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும். நுரைவருவதைக் காணலாம், பயப்படவேண்டாம், ஒரு கரண்டியால் நீக்கிவிடவும்.
 4. ரிப்பன்கள் வேக ஆரம்பித்ததும், மேலெழும்பி மிதக்கும். அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு வடிக்கட்டியில் தண்ணீரை வடிக்கட்டி ஆறவிடவும்.
 5. அந்த ரிப்பன்களை ஒரு நறுக்கும் பலகையில் வைத்து சமமானத் துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
 6. குழம்புக்கு: ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சீரகம் சேர்க்கவும். அவை வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
 7. மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், மல்லித்தூளைச் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பக்கங்களிலிருந்து எண்ணெய் பிரியும்வரை வறுக்கவும்.
 8. மசாலா தயாரான உடனே, அடித்து வைத்துள்ள தயிரைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். சிறிது தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளவும், தேவையானப் பதத்தினைப் பெறுவதற்காக.
 9. கேட்டே துண்டுகளைக் குழம்பிற்குள் போட்டு 5-6 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும். சப்ஜியை மூடி வைக்கவும்.

Reviews for Rajasthani Gatte ki Sabji in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.