பாசிப்பயிர் (மாங்கொடி) புலாவ் | Mangodi Pulao in Tamil

எழுதியவர் Shikha Gupta  |  14th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mangodi Pulao by Shikha Gupta at BetterButter
பாசிப்பயிர் (மாங்கொடி) புலாவ்Shikha Gupta
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

651

0

பாசிப்பயிர் (மாங்கொடி) புலாவ் recipe

பாசிப்பயிர் (மாங்கொடி) புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mangodi Pulao in Tamil )

  • 1-1/2 கப் அரிசி
  • 3/4கப் பாசிப்பயிர் (பெரியது)
  • எண்ணெய்/நெய் 3 தேக்கரண்டி
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • இலவங்கப்பட்டை 1
  • கிராம்பு 3-4
  • கருமிளகு 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • மிளகாய்த்தூள் 1/2 தேக்கரண்டி
  • இஞ்சிப்பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  • நறுக்கிய கொத்துமல்லி
  • அலங்கரிப்பதற்கா:
  • அப்பளம்
  • எலுமிச்சை

பாசிப்பயிர் (மாங்கொடி) புலாவ் செய்வது எப்படி | How to make Mangodi Pulao in Tamil

  1. அரிசியை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. பாசிப்பயிரை பொன்னிறமாக ஒரு வானலில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.
  3. குக்கரில் எண்ணெயை/நெய்யைச் சூபடுத்தி இலவங்கப்பட்டை, கிராம்பு, கருமிளகு, இஞ்சிப்பூண்டு விழுது, வறுத்த பாசிப்பயிரைச் சேர்க்கவும். 3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  4. கொதிக்கட்டும். அரிசி, மல்லி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு விசில் வரும்வரை வேகவைக்கவும்.
  5. ஆறட்டும். மசாலா அப்பளம் மற்றும் ரைத்தாவோடு சூடாகப் பரிமாறவும்.
  6. கொத்துமல்லியால் அலங்கரித்து எலுமிச்சை சாறை அதன் மீது தெளிக்கவும்.

எனது டிப்:

சுவைக்கு நெய் சேர்க்கவும், மஞ்சள் தூள் சேர்க்கவேண்டாம், மேலும் பாசிப்பயிரை (மாங்கொடியை) அதிகம் வறுக்கவேண்டாம், அது கருகிவிடும்.

Reviews for Mangodi Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.