வீடு / சமையல் குறிப்பு / குருவிக் கூடு

Photo of Bird's nest by Vahitha Hasan at BetterButter
173
3
0.0(0)
0

குருவிக் கூடு

Apr-15-2018
Vahitha Hasan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குருவிக் கூடு செய்முறை பற்றி

குருவிக்கூடு வடிவத்தில் உள்ள உருளைக்கிழங்கு தீனி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 உருளைக் கிழங்கு, வேக வைத்து மசித்தது
  2. 1 சக்கரைவள்ளி கிழங்கு, வேக வைத்து மசித்தது
  3. 1 வெங்காயம், நறுக்கியது
  4. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 3 பச்சை மிளகாய், நறுக்கியது
  6. 1/4 தே கரண்டி மஞ்சள் தூள்
  7. 1/4 தே கரண்டி கரம் மசாலா
  8. 1/4 தே கரண்டி சீரகத் தூள்
  9. 1/4 தே கரண்டி கொத்துமல்லி தூள்
  10. உப்பு
  11. எண்ணெய், பொரிக்க
  12. 1 கப் உடைத்த சேமியா
  13. 1 தே கரண்டி சோள மாவு, 3 மேஜை கரண்டி நீரில் கரைத்து
  14. 1/4 கப் அவித்த பட்டாணி (அலங்கரிக்க)
  15. நறுக்கிய கொத்துமல்லி இழை, அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்
  2. பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், கொத்துமல்லி தூள் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
  3. பின்பு உருளைக் கிழங்கு, சக்கரை வள்ளி கிழங்கு, உப்பு சேர்த்து கிளறி, 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்
  4. மசாலா ஆறியதும், 2 மேஜை கரண்டி அளவு எடுத்து, வடை போல் தட்டிக்கொள்ளவும். அதில் நடுப்பகுதியை விரலால் அழுத்தி லேசாக குழி போல செய்யவும்
  5. அதை சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து பின் சேமியாவில் பிரட்டவும்
  6. இதே போல் மீதமுள்ள மசாலாவை செய்து 15 நிமிடம் ஃபிரிசரில் வைக்கவும்
  7. ஃபிரிசரில் இருந்து எடுத்து, உடனே எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  8. நடுப்பகுதியில் இரண்டு பட்டாணி மற்றும் மல்லி கீரை வைத்து அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்