வீடு / சமையல் குறிப்பு / அரிசி நகெட்ஸ்

Photo of Rice Nugets by Saivardhini Badrinarayanan at BetterButter
263
4
0.0(0)
0

அரிசி நகெட்ஸ்

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரிசி நகெட்ஸ் செய்முறை பற்றி

சுவையான அரிசியில் செய்த நகெட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி 1 கப்
  2. கடுகு 1 மேஜைக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு 1 மேஜைக்கரண்டி
  4. கடலை பருப்பு 1 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பிலை
  6. தேங்காய் துருவல் 1/4 கப்
  7. பச்சை மிளகாய் 2
  8. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  9. உப்பு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸ்யில் தேங்காய் துருவல் , ஜீரகம் , பச்சைமிளகாய் , ஊற வைத்த அரிசி & உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் அரைத்த மாவை சேர்த்து கலந்து பாதி வெந்த வுடன் தீயை அணைத்து சூடு ஆறவிடவும்.
  5. பின் கை பொறுக்கும் சூட்டில் நகெட்ஸ் வடிவில் பிடித்து கொள்ளவும்.
  6. பின் இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
  7. பின் இதனுடன் புளிப்பு சட்னி அல்லது தேங்காய் சட்னி வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்