Photo of Chicken Nuggets by Bena Aafra at BetterButter
479
5
0.0(1)
0

Chicken Nuggets

Apr-16-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் -200கிராம்
  2. சோளமாவு-2ஸ்பூன்
  3. மைதா மாவு-2ஸ்பூன்
  4. மிளகு தூள்
  5. மிளகாய் தூள்
  6. மஞ்சள் தூள்
  7. ப்ரட் க்ரம்ஸ்
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. முட்டை

வழிமுறைகள்

  1. சிக்கனை சுத்தம் செய்து வேகவைத்து சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.
  3. உருண்டை பிடிக்கும் அளவுக்கு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
  5. முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடித்து வைத்து கொள்ளவும்.
  6. பின் அரைத்து வைத்துள்ள சிக்கனை நக்கெட்ஸ் போல் தட்டி மைதா கலவையில் பிரட்டி எடுத்து அடித்து வைத்துள்ள முட்டையில் டிப் செய்து எடுத்து பிரட்க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
  7. பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அவற்றை போட்டு பொரித்து எடுக்கவும். சூடான சிக்கன் நக்கெட்ஸ் ரெடி...
  8. நக்கெட்ஸ் உடன் உருளைக்கிழங்கு பொரித்து சாஸிடன் தொட்டு சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Star Tamil
Apr-17-2018
Star Tamil   Apr-17-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்