வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Banana Flower Vadai by Priya Tharshini at BetterButter
733
4
0.0(0)
0

வாழைப்பூ வடை

Apr-17-2018
Priya Tharshini
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

கரகரப்பான வாழைப்பூ சேர்த்து செய்யப்படும் மசாலா வடை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைப்பூ- 11/2 கப் நறுக்கியது
  2. கடலை பருப்பு- 1 கப்
  3. ப.மிளகாய்- 2
  4. இஞ்சி- 1 துண்டு
  5. உப்பு- தேவைக்கு
  6. மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி- சிறிதளவு
  8. கருவேப்பிலை- சிறிதளவு
  9. தண்ணீர்- தேவைக்கு
  10. எண்ணெய்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். கடலை பருப்பு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த க.பருப்பை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் ப.மிளகாய், இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கோர கோர வென்று அரைத்துக் கொள்ளவும்.
  3. 3/4 பாகம் நறுக்கிய வாழைப்பூவை மிக்ஸியில் சேர்க்கவும்.
  4. அதை விப்பரில் பல்ஸ் செய்து கொள்ளவும்.
  5. அரைத்த விழுது மற்றும் நறுக்கிய வாழைப்பூ, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  6. அதை சம உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். வடை போல் தட்டவும்.
  7. சூடான எண்ணெய்யில் தட்டிய வடைகளை போட்டு மிதமான சூட்டில் வேக விடவும்.
  8. நன்கு இரண்டு பக்கமும் வேகும் வரை திரிப்பவும்.
  9. ஓசை அடங்கியதும் வடையை எடுக்கவும்.
  10. வாழைப்பூ வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்