Photo of JEERA POLI by Divya Raja at BetterButter
876
3
0.0(1)
0

JEERA POLI

Apr-17-2018
Divya Raja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

JEERA POLI செய்முறை பற்றி

மிகவும் சுலபமான திண்பண்டம்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ்... ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1. ரவா - 1/2 கப்
  2. 2. தண்ணீர் - 1 1/2 கப் + 1/4 கப்
  3. 3. நெய் - 1/2 தேக்கரண்டி
  4. 4. மைதா - தோய்த்து கொள்வதற்கு
  5. 5. எண்ணெய் - பொறிப்பதற்கு
  6. 6. சர்க்கரை - 1 1/2 கப்
  7. 7. கேசரி பவுடர் - 1 சிட்டிகை (விருப்பமானால்)
  8. 8. ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ரவையைப் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/4 கப் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும். பிறகு, அதில் சிறிது நெய் தடவி 30 மணி நேரம் ஊற விடவும்.
  3. ஊறும் இடைவெளியில், ஒரு கடாயில் சர்க்கரைப் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் விட்டுக் கரைய விடவும்.
  4. சர்க்கரைக் கரைந்தவுடன், கேசரி பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 8 நிமிடம் கொதிக்க விடவும் (சிறியத் தீயில்). பிறகு ஜுராவைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. பிறகு, பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  6. உருட்டிய மாவை மைதாவுடன் தோய்த்து வட்ட வடிவில் இட்டுக் கொள்ளவும்.
  7. இட்ட பூரியை ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பொன் நிறமாகப் பொறித்து ஜுராவில் போட்டு எடுக்கவும். இப்பொழுது, சூடான சுவையான ஜீரா போளி தயார்....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Aarthy Rajkumar
Apr-19-2018
Aarthy Rajkumar   Apr-19-2018

Hello sis intha receipe Nalla iruku ana neega receipe la 30 mani neram nu solli irukeenga ,, please atha CRT pannunga

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்