வீடு / சமையல் குறிப்பு / ஆலு லாலி பாப்

Photo of ALOO LOLLY POP by Munsila Fathima at BetterButter
356
3
0.0(0)
0

ஆலு லாலி பாப்

Apr-17-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு லாலி பாப் செய்முறை பற்றி

எளிதில் செய்ய கூடிய சுவையான தின்பண்டம். பார்ட்டியில் ஸ்டார்டர் ஆக கூட வைத்து அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு - 3
  2. உப்பு - தேவைக்கு
  3. எண்ணெய் - பொறித்து எடுக்க
  4. சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் - 1 (அ) 1 1/2தேக்கரண்டி
  6. பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
  7. ரெட் கலர் - பின்ச்
  8. பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
  9. சீரக தூள் - 1 தேக்கரண்டி
  10. சோள மாவு- 1 தேக்கரண்டி ( தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்)
  11. பிரட் தூள்
  12. பிரட் ஸ்டிக் ( ஒன்றை பாதியாக உடைத்து உபயோகிக்கலாம்)

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை குக்கரில் வேக வைத்து நன்கு மசித்து கொள்ளுங்கள்.
  2. மசித்த கிழங்குடன் கலர்,உப்பு,மிளகாய் தூள், சாட் மசாலா , பூண்டு பொடி, பட்டை தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த கிழங்கை சிக்கனை போல் பிரட் ஸ்டிக்கில் வடிவமைத்து கொள்ளுங்கள்.
  4. வடிவமைத்த கிழங்கை சோள கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுக்கக்வும்.
  5. பிரட்டிய கிழங்கை மிதமான நெருப்பில் பொறித்து எடுக்கவும்.
  6. சுவையான லாலி பாப்பை சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்