காஷ்மீர் பன்னீர் சாமன் | Kashmiri Paneer Chaman in Tamil

எழுதியவர் Moumita Malla  |  18th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Kashmiri Paneer Chaman recipe in Tamil,காஷ்மீர் பன்னீர் சாமன், Moumita Malla
காஷ்மீர் பன்னீர் சாமன்Moumita Malla
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1235

0

காஷ்மீர் பன்னீர் சாமன் recipe

காஷ்மீர் பன்னீர் சாமன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kashmiri Paneer Chaman in Tamil )

  • பன்னீர் - 250 கிராம்
  • தக்காளி கூழ் - 1 கப்
  • காஷ்மீர் சிகப்பு மிளகாய் தூள் - 2 டீக்கரண்டி
  • பெருங்காயம் - 1 சிட்டிகை
  • சீரகம் - 1/2 டீக்கரண்டி
  • பெருஞ்சீரகத் தூள் - 2 டீக்கரண்டி
  • உலர் இஞ்சி தூள் - 1/2 டீக்கரண்டி
  • மஞ்சள்தூள் - 1/2 டீக்கரண்டி
  • கரம் மசாலா - 1 டீக்கரண்டி
  • நெய் - 1 டீக்கரண்டி
  • இலவங்க இலை - 1
  • கருப்பு ஏலக்காய் - 2
  • பச்சை ஏலக்காய் - 4
  • இலவங்க பட்டை - 1
  • எண்ணெய் - 5 தேக்கரண்டி (கடுகு எண்ணெய்க்கு முன்னுரிமை)
  • தண்ணீர் 1/2 கப்
  • உப்பு சுவைக்கேற்ப

காஷ்மீர் பன்னீர் சாமன் செய்வது எப்படி | How to make Kashmiri Paneer Chaman in Tamil

  1. பன்னீரை செவ்வக வடிவில் கனமான துண்டுகளாக வெட்டவும்.
  2. 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, பன்னீர் துண்டுகளை இரு புறமும் மேலோட்டமாக லேசான பொன்னிறத்தில் வறுக்கவும். அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. இப்போது பெருங்காயம், கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், இலவங்க இலைகள் மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
  4. தக்காளி கூழ், உப்பு, சிகப்பு மிளகாய்த்தூள், உலர் இஞ்சி தூள் சேர்க்கவும். மசாலா எண்ணெய்யை விட்டுச் பிரியும் வரை கொதிக்க விடுங்கள்.
  5. இப்போது இந்த மசாலாவில் பன்னீர் சேர்க்கவும். சிறிது பெருஞ்சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  6. இப்போது 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  7. நன்றாக கலந்து 2-3 நிமிடம் வேகவிடவும்.
  8. கரம் மசாலாத் தூள் மற்றும் நெய் சேர்த்து மூடிவிடவும். இதை 2 நிமிடம் வேகவிடவும். அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய கொத்தமல்லியைக் கொண்டு அலங்கரிக்கவும்.
  9. சூடான சாதம் அல்லது எதாவதொரு இந்திய பிரட் வகையுடன் உண்டு மகிழலாம்.

எனது டிப்:

கடையில் இருந்து வாங்கி தக்காளி கூழுக்கு பதிலாக, நான் வீட்டில் செய்யப்பட்ட தக்காளி கூழையே பரிந்துரைப்பேன்.

Reviews for Kashmiri Paneer Chaman in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.