வீடு / சமையல் குறிப்பு / பெஷாவர் நான்

Photo of Peshawari Naan by Nandita Shyam at BetterButter
2787
359
4.8(0)
0

பெஷாவர் நான்

Apr-18-2016
Nandita Shyam
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • முகலாய்
  • பேக்கிங்
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் - 15/ மிலி, சுடாக்கியது
  2. ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
  3. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  4. அனைத்துக்குமான மாவு அல்லது மைதா - 500 கிராம்
  5. உப்பு - 1 தேக்கரண்டி அல்லது சுவைக்கேற்ற அளவு
  6. தயிர் 6-8 தேக்கரண்டி
  7. வெண்ணெய் 4-5 தேக்கரண்டி, உருக்கியது
  8. வெள்ளை எள்ளு - 1 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
  9. சிவ்கள் (இனப்பூண்டு) 1-2 தேக்கரண்டி, பொடியாக நறுக்கியது.

வழிமுறைகள்

  1. சூடான பாலை ஈஸ் மற்றும் தயிரோடு கலந்துகொள்க. கரையும்வரை கலக்கி 30 நிமிடங்கள் அல்லது குமிழ் வரும்வரை எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பெரிய பாத்திரத்தில், மாவு, உப்பு, பாலை நன்றாகக் கலந்துகொள்க. மையத்தில் குழி பறித்து உருக்கிய வெண்ணெய், தயிர், ஈஸ் கலவையைப் போட்டு மாவாக அரைத்துக்கொள்க.
  3. கைகளாக ஒன்றுகூட்டுக. மாவு மிருதுவாக ஒட்டும் பதத்தில் இருக்கவேண்டும். அதனால் தேவைப்பட்டால் அதிகம் தண்ணீர் சேர்க்கவும்.
  4. மாவு தெளிக்கப்பட்டத் தரையில் 5-10 நிமடங்கள் மாவைப் பிசைந்து மாவு தெளிக்கப்பட்ட கிண்ணத்தில் ஈரமான ஒரு டீ துணியால் மூடி ஒரு மணி நேரத்திற்கு வைக்கவும் அல்லது மாவு இரட்டிப்பாக உப்பும் வரை வைக்கவும்.
  5. உப்பியதும் மாவை மீண்டும் தரைக்குக் கொண்டுவந்து மாவைக் குத்தி மேலும் ஒரு நிமிடம் பிசையவும்.
  6. மாவை 12 சம பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றையும் உருட்டிக்கொள்க. கொஞ்சம் எள்ளு அரை தேக்கரண்டி இனப்பூண்டு தூவிக் கொஞ்சம் மாவு சேர்த்து நீள்வட்ட வாக்கில் மாவை உருட்டிக்கொள்க.
  7. கிரிடிலைச் சூடுபடுத்தி உருட்டிய நானின் கீழ் பக்கத்தில் எள்ளுசேர்த்து உருட்டவும். சற்றே உப்பும் வரை ஒரு பக்கத்தை வேகவைக்கவும்.
  8. திருப்பி அடுத்தப் பக்கத்தையும் உப்பும் வரை வேகவைக்கவும். அதன்பின்னர் நானை நேரடியாகத் தீயில் இருப்பக்கங்களும் பொன்னிறமாகும்வரை காட்டவும்.
  9. மீதமுள்ள மாவுக்கும் இப்படியே செய்யவும். ஒவ்வொரு நானையும் நெய் அல்லது உருக்கிய வெண்ணெய் தடவி உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்