வீடு / சமையல் குறிப்பு / பஞ்சாபி தாபா பாணியில் உருளைக்கிழங்கு கோபி

Photo of aloo gobi punjabi dhaba style by Shreya barve at BetterButter
2438
122
4.6(0)
0

பஞ்சாபி தாபா பாணியில் உருளைக்கிழங்கு கோபி

Apr-18-2016
Shreya barve
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • மற்றவர்கள்
 • பஞ்சாபி
 • ஸ்டீமிங்
 • ஸாட்டிங்
 • மெயின் டிஷ்
 • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. 1 நடுத்தர அளவிலான காலிபிளவர்/கோபி
 2. 1 நடுத்தர அளவு வெங்காயம் நறுக்கியது
 3. 3-4 பூண்டு + ½ இன்ச் இஞ்சி - நசுக்கியது
 4. 1-2 பச்சை மிளகாய் நசுக்கியது
 5. ½ தேக்கரண்டி பெருஞ்சீரகம்
 6. ½ சீரகம்
 7. 1 நடுத்தர அளவு தக்காளி நறுக்கியது
 8. ஒரு சிட்டிகை பெருங்காயம்
 9. ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
 10. ½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 11. 1-2 மல்லி சீரகத் தூள்
 12. 1-2 காய்ந்த மிளகாய்
 13. ½ தேக்கரண்டி பஞ்சாபி கரம் மசாலா தூள்
 14. ½ தேக்கரண்டி நசுக்கிய கஸ்தூரி வெந்தயக் கீரை
 15. 1.5 கப் தண்ணீர் - தேவைப்பட்டால் ஒரு ½ கப் அதிகமாக
 16. 4-5 தேக்கரண்டி எண்ணெய் பொரிப்பதற்கு
 17. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

 1. ஒரு காலிபிளவரை நடுத்தர அளவுப் பூக்களாக நறுக்கி அலசி எடுத்து வைக்கவும்.
 2. 3 கப் தண்ணீரை உப்போடு சூடுபடுத்தி கொதி வந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
 3. இப்போது பூக்களை வெந்நீரில் சேர்த்து முறுப்பான-மிருதுவான நிலைக்கு 5ல் இருந்து 6 நிமிடங்கள் வேகவைத்து காலிபிளவர் பூக்களை வடிக்கட்டி எடுத்துவைத்து மெதுவாகத் துடைத்து உலர்த்தவும்.
 4. இதற்கிடையில், வெங்காயத்தை நறுக்கி இஞ்சிப்பூண்டு மிளகாய், பெருஞ்சீரகத்தை குழவியில் அரைத்துககொள்ளவும்.
 5. தக்காளியை நறுக்கி எடுத்து வைக்கவும்.
 6. ஒரு கடாயில் அல்லது வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகத்தோடு பதப்படுத்தவும். வெடிக்க ஆரம்பித்ததும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
 7. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 5ல் இருந்து 7 நிமிடங்கள் வேகவைத்து மிருதுவாகும்வரை வதக்கவும்.
 8. இஞ்சிப்பூண்டு விழுது, பச்சை மிளகாய், பெருஞ்சீகரத்தைச் சேர்த்து நசுக்கி சில நொடிகள் வதக்கவும், இஞ்சிப்பூண்டின் பச்சை வாடை போகும்வரை.
 9. இப்போது காய்ந்த மிளகாயையும் அனைத்து மசாலாத் தூள்களையும் சேர்த்து (மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், பஞ்சாபி கரம் மசாலா) 1-2 நிமிடங்கள் நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 10. அடுத்து நறுக்கியத் தக்காளிகளைச் சேர்த்து அவை மிருதுவாகும்வரையிலும் எண்ணெய் மசாலாவிலிருந்து பக்கவாட்டில் வெளிவரும்வரை வரையில் வதக்கவும்.
 11. அரைவேக்காட்டு காலிபிளவர் பூக்களோடு உப்பு கரம் மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 12. ஒரு கப்பில் பாதியளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் குறையும்வரை வேகவைக்கவும்.
 13. காலிபிளவர் மசாலாவை உயர் தீயில் 10-15 நிமிடங்கள் தோராயமாக முழுமையாக வேகும்வரையில் வேகவைக்கவும்.
 14. நசுக்கிய கஸ்தூரி வெந்தயம் சேர்த்து கலக்கி அடுப்பை நிறுத்தவும்.
 15. ரொட்டி, சாதாரண பரோட்டா, நான் அல்லது தந்தூரி ரொட்டியோடு பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்