வீடு / சமையல் குறிப்பு / காஷ்மீர் புலாவ்

Photo of Kashmiri Pulao by Divya A at BetterButter
3328
583
4.4(0)
0

காஷ்மீர் புலாவ்

Apr-18-2016
Divya A
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஹிமாச்சல
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி - 75 கிராம்
  2. பெரிய வெங்காயம் - 1 (மெலிதாக நறுக்கியது)
  3. பச்சை மிளகாய் - 1 (விருப்பம் சார்ந்தது)
  4. இஞ்சி - 1/4இன்ச் நீளமுள்ள சிறிய துண்டு (நசுக்கியது)
  5. புதினா இலை - கொஞ்சம் (8ல் இருந்து 10 இலைகள்)
  6. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
  7. உலர் திராட்சை - 15ல் இருந்து 20 (உங்களுக்கு அந்தளவிற்கு பிடிக்கவில்லை என்றால் குறைத்துக்கொள்ளவும்)
  8. குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
  9. சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
  10. பாதாம் பருப்பு - 5ல் இருந்து 10 (நறுக்கியது)
  11. முந்திரி பருப்பு - 8
  12. பாதாம் பருப்பு - 3ல் இருந்து 5 (நறுக்கியது)
  13. பிஸ்தா பருப்பு - 3ல் இருந்து 5 (நறுக்கியது)
  14. கிராம்பு - 2
  15. பிரிஞ்சி இலை - 1
  16. ஏலக்காய் - 2
  17. இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு
  18. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  19. மிளகு - 1/4 தேக்கரண்டி
  20. நெய் - 2 தேக்கரண்டி
  21. எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை இரண்டு முறைக் கழுவி ஒரு கடாயில் சேர்த்து கிட்டத்தட்ட 3 அல்லது 4 மடங்களு அரிசியைச் சேர்க்கவும். அதன்பின்னர் கொஞ்சம் உப்பு ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். மிதமானச் சூட்டில் அரிசி சற்றே அரிசித்தன்மையோடு இருக்கும்படி வேகவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
  2. தண்ணீரை வடிக்கட்டி சமைத்த அரிசியை எடுத்து வைக்கவும்.
  3. இப்போது ஒரு கடாயைத் தீயில் வைத்து எண்ணெய்யோடு நெய்யை ஊற்றவும். சூடானபின்னர் நறுக்கிய வெங்காயத்தையும் சர்க்கரையையும் சேர்க்கவும். ஒரு மிதமானச் சூட்டில் வெங்காயம் பொன்னிறமாகி கேரமலைஸ் ஆகும்வரை வதக்கவும். கடாயிலிருந்து வெங்காயத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அதே எண்ணெயில் பிரிஞ்சி இலை, ஏலக்காய், சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு போன்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து சிறு தீயில் சில விநாடிகள் வதக்கவும்.
  5. அதன்பின்னர் கொட்டைகள், நசு்ககிய இஞ்சி, பிளந்த பச்சை மிளகாய், உலர் திராட்சை சேர்த்து சிறு தீயில் பருப்புகள் மொறுமொறுப்பாகி சற்றே பொன்னிறமாகும்வரை வதக்கவும். இப்போது கொஞ்சம் புதினா சேர்த்துக் கிளரவும்.
  6. சீரகத் தூள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  7. அதன்பின்னர் குங்குமப்பூத் தாள்களை (பயன்படுத்துவதற்கு முன் நன்றாகப் பொடிசெய்யப்பட்டது) சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
  8. அதன்பின்னர் வேகவைத்த அரிசியைச் சேர்த்து மெதுவாக வதக்கவும், அப்போதுதான் அரிசி உடையாது. கலவை அரிசியுடன் நன்காறக் கலக்கும்வரை கிளரவும்.
  9. இறுதியாக கேரமலைஸ் செய்யப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். (அலங்கரிப்பதற்காகக் கொஞ்சம் கேரமலைஸ் செய்யப்பட்ட வெங்காயத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்)
  10. அடுப்பிலிருந்து இறக்கி நறுக்கிய புதினா அல்லது கேரமலைஸ் வெங்காயத்தோடு அலங்கரித்து கொஞ்சம் குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்