வீடு / சமையல் குறிப்பு / மேகி பக்கோடா

Photo of Maggi Pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
278
2
0.0(0)
0

மேகி பக்கோடா

Apr-23-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மேகி பக்கோடா செய்முறை பற்றி

சுவையான மேகி பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மேகி பாக்கெட் 1
  2. வெங்காயம் 1
  3. கேரட் நறுக்கியது 1/4 கப்
  4. முட்டைகோஸ் துருவியது 1/4 கப்
  5. குடைமிளகாய் நறுக்கியது 1/4 கப்
  6. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  8. மல்லித்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  9. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  10. பச்சைமிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  11. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  12. கடலை மாவு 1/2 கப்
  13. அரிசி மாவு 1/4 கப்
  14. கொத்துமல்லி இலை 1/4 கப்
  15. உப்பு
  16. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து அதில் மேகி மசாலா சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  2. பின் மேகியை இரண்டாக உடைத்து கொதிக்கும் நீரில் சேர்த்து வேக வைக்கவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் வேகா வைத்த மேகி, பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், பச்சைமிளகாய் , கொத்துமல்லி ,நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், துருவிய முட்டைகோஸ், இஞ்சி சேர்க்கவும்.
  4. பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு, கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் கலந்த மேகி கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்யில் போட்டு நன்கு பொன்னிறமாக மொறு மொறுவென்று பொறித்து எடுக்கவும்.
  7. தக்காளி சாஸ் உடன் பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்