மார்வாடி அப்பள கூட்டு | Marwadi Papad Ki Sabji in Tamil

எழுதியவர் Shweta Agrawal  |  4th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Marwadi Papad Ki Sabji by Shweta Agrawal at BetterButter
மார்வாடி அப்பள கூட்டுShweta Agrawal
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

3991

0

மார்வாடி அப்பள கூட்டு recipe

மார்வாடி அப்பள கூட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Marwadi Papad Ki Sabji in Tamil )

 • 10 அப்பளங்கள்
 • 2 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 டீக்கரண்டி சீரகம்
 • சிறிதளவு பெருங்காயம்
 • 1/2 கப் தயிர்
 • 1 1/2 கப் தண்ணீர்
 • 2 தேக்கரண்டி கொத்தமல்லித் தூள்
 • 1 தேக்கரண்டி கடலைமாவு
 • 1/2 டீக்கரண்டி மஞ்சள்தூள்
 • சுவைக்காக சிகப்புமிளகாய்
 • சுவைகேற்ப உப்பு
 • 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை வெட்டப்பட்டது
 • 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு

மார்வாடி அப்பள கூட்டு செய்வது எப்படி | How to make Marwadi Papad Ki Sabji in Tamil

 1. அப்பளத்தை வருத்தோ/ பொறித்தோ வைத்துக்கொள்ளவும். அப்பளத்தை துண்டுகளாக உடைத்து அதனை தனியாக வைத்துக் கொள்ளவும்.
 2. கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளவும். சீரகம் பொறிய தொடங்கியதும் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.
 3. அதேநேரம், ஒரு கப்பை எடுத்துக்கொண்டு தயிரில் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, சிகப்பு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின் இவற்றை நன்றாக கலந்துக்கொள்ளவும்.
 4. வெப்பத்தை குறைத்துக்கொண்டு கிளறிக் கொண்டு இருக்கும் போதே கடாயில் தயிர் கலவை சேர்த்துக் கொள்ளவும்.
 5. கலவை கடாயில் இருக்கு போதே தீயை சற்று அதிகப்படுத்தவும். கலவை வற்றி எண்ணெய் பரவும் வரை காத்திருக்கவும். அடுத்து அப்பளத்துண்டுகளை அதனுடன் சேர்த்து ஒன்றாக சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
 6. மீதமுள்ள தண்ணீரை ஊற்றி 8-10 நிமிடம் வேகவிடவும்.
 7. சுவைத்துப் பார்த்து, காரத்தை தேவையான அளவு சரிசெய்து கொள்ளவும், தேவைப்பட்டால் எழுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
 8. கொத்தமல்லி இலை சேர்த்து அழகுபடுத்தி சூடாக பரிமாறவும்.

எனது டிப்:

ஏற்கனவே அப்பளத்தில் உப்பு உள்ளதால் இந்த உணவில் அதிகமான உப்பு சேர்க்கவேண்டாம் என்பதை நினைவில்க் கொள்க.

Reviews for Marwadi Papad Ki Sabji in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.