வீடு / சமையல் குறிப்பு / மார்வாடி அப்பள கூட்டு

Photo of Marwadi Papad Ki Sabji by Shweta Agrawal at BetterButter
7573
522
4.8(0)
2

மார்வாடி அப்பள கூட்டு

Aug-04-2015
Shweta Agrawal
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ராஜஸ்தான்
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 10 அப்பளங்கள்
  2. 2 தேக்கரண்டி எண்ணெய்
  3. 1 டீக்கரண்டி சீரகம்
  4. சிறிதளவு பெருங்காயம்
  5. 1/2 கப் தயிர்
  6. 1 1/2 கப் தண்ணீர்
  7. 2 தேக்கரண்டி கொத்தமல்லித் தூள்
  8. 1 தேக்கரண்டி கடலைமாவு
  9. 1/2 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  10. சுவைக்காக சிகப்புமிளகாய்
  11. சுவைகேற்ப உப்பு
  12. 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை வெட்டப்பட்டது
  13. 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு

வழிமுறைகள்

  1. அப்பளத்தை வருத்தோ/ பொறித்தோ வைத்துக்கொள்ளவும். அப்பளத்தை துண்டுகளாக உடைத்து அதனை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளவும். சீரகம் பொறிய தொடங்கியதும் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.
  3. அதேநேரம், ஒரு கப்பை எடுத்துக்கொண்டு தயிரில் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, சிகப்பு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின் இவற்றை நன்றாக கலந்துக்கொள்ளவும்.
  4. வெப்பத்தை குறைத்துக்கொண்டு கிளறிக் கொண்டு இருக்கும் போதே கடாயில் தயிர் கலவை சேர்த்துக் கொள்ளவும்.
  5. கலவை கடாயில் இருக்கு போதே தீயை சற்று அதிகப்படுத்தவும். கலவை வற்றி எண்ணெய் பரவும் வரை காத்திருக்கவும். அடுத்து அப்பளத்துண்டுகளை அதனுடன் சேர்த்து ஒன்றாக சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  6. மீதமுள்ள தண்ணீரை ஊற்றி 8-10 நிமிடம் வேகவிடவும்.
  7. சுவைத்துப் பார்த்து, காரத்தை தேவையான அளவு சரிசெய்து கொள்ளவும், தேவைப்பட்டால் எழுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
  8. கொத்தமல்லி இலை சேர்த்து அழகுபடுத்தி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்