வீடு / சமையல் குறிப்பு / தஹி பூரி சாட்

Photo of Dahi puri Chat by Saivardhini Badrinarayanan at BetterButter
205
3
0.0(0)
0

தஹி பூரி சாட்

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
540 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தஹி பூரி சாட் செய்முறை பற்றி

சுவையான பூரி சாட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை 1 கப்
  2. கோதுமை மாவு 1/4 கப்
  3. தயிர் 1 கப்
  4. வெள்ளை பட்டாணி 1/2 கப்
  5. உருளைக்கிழங்கு 2
  6. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  7. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  8. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  9. உப்பு
  10. கொத்துமல்லி இலை 1/4 கப்
  11. பச்சை சட்னி 2 மேஜைக்கரண்டி
  12. ஸ்வீட் சட்னி 2 மேஜைக்கரண்டி
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கு எடுத்து 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு , உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. 8 மணி நேரம் ஊற வைத்த வெள்ளை பட்டாணியை 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  4. பின் உருளைகிழங்கை தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் மசித்த கிழங்கு, வேக வைத்த பட்டாணி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், ஜீரக தூள், சாட் மசாலா , உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. பின் பிசைந்த மாவை சிறிய உரண்டைகளாக உருட்டி தேய்த்து சிறிய மூடியில் அழுத்தி சிறிய பூரியாக செய்து கொள்ளவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக போட்டு நன்கு பொறித்து எடுக்கவும்.
  8. பின் பொறித்த பூரியை தட்டில் அடுக்கி நடுவில் ஓட்டை போட்டு அதில் கிழங்கு கலவையை வைத்து, தயிர் சேர்த்து, பச்சை சட்னி, ஸ்வீட் சட்னி, பூந்தி வைத்து பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்