வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை குல்கந்து லட்டு

Photo of Paan Gulkand ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
1052
3
0.0(0)
0

வெற்றிலை குல்கந்து லட்டு

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை குல்கந்து லட்டு செய்முறை பற்றி

சுவையான வெற்றிலை லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • குஜராத்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெற்றிலை 20
  2. குல்கந்து 5 மேஜைக்கரண்டி
  3. முந்திரி 10
  4. பாதாம் 10
  5. பிஸ்தா 10
  6. கண்டேன்ஸ் மில்க் 1 கப்
  7. தேங்காய் துருவல் 1/2 கப்
  8. நெய் 3 மேஜைக்கரண்டி
  9. காய்ந்த தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. வெற்றிலையை நன்கு அலசி மிக்ஸியில் போட்டு அத்துடன் கண்டென்ஸ் மில்க் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து பொடியாக நறுக்கிய நட்ஸ் அனைத்தையும் பொன்னிறமாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. பின் அதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.
  4. பின் அதில் அரைத்த வெற்றிலை விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
  5. பின் நன்கு அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் போது தீயை அணைத்து ஆறவிடவும்.
  6. பின் வறுத்த நட்ஸ் கிண்ணத்தில் சேர்த்து அதில் குல்கந்து சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  7. பின் வெற்றிலை கலவை ஆறிய பின் சிறிய உரண்டைகளாக பிடித்து நடுவில் அழுத்தி குல்கந்து கலவை வைத்து மறுபடியும் உருட்டி காய்ந்த தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்